Saturday 30 November 2019

வரலாற்றில் இன்று - நவம்பர் 28

வரலாற்றில் இன்று - நவம்பர் 28
* பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து.
* 1893 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில்தான் உலகில் முதன்முதலாக பெண்கள் வாக்களித்தனர்.எலிசபத் ஏக்ஸ் என்ற பெண்மணி மேயர் பதவிக்கு வேட்பாளராகவே நின்றார்.
* 1887ஆம் ஆண்டிலிருந்தே நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
* பெண்களுக்கு நாடு தழுவிய வாக்குரிமை அளிக்க நியூசிலாந்து நாடு முன்வந்து 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி மகளிருக்கான வாக்குரிமை சட்டமாக்கப்பட்டது.
* பெரும் போராட்டங்களுக்கு பின்னணியில் இருந்த கேட் ஷெப்பர்டு (KATE SHEPPARD) என்ற பெண்ணின் தீவிர பிரசாரமும், விடாமுயற்சியும் பெண்களுக்கான வாக்குரிமை பெற்றுக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
* 1780ஆம் ஆண்டுகளிலேயே பிரான்சில் மகளிர் வாக்குரிமைக்கான இயக்கம் தொடங்கப்பட்டுவிட்டது. பின்னர் அது ஸ்வீடனிலும் பரவியது.
* உலக நாடுகள் அனைத்திலும் ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் நிலை இருந்தது.பெண்களுக்கு வாக்குரிமை அளித்தால் குடும்ப அமைப்பு நாசமாகிவிடும்,சமூகம் சீர்கெட்டுவிடும் என்பன போன்ற பிற்போக்கு ஆணாதிக்க கருத்துகள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்காமல் இருக்க காரணங்களாக கூறப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
க.ம.மணிவண்ணன்

கோவில்களும், ஐ.ஐ.டிகளும்

கோவில்களும், ஐ.ஐ.டிகளும்
---------------------------------------------
பார்ப்பனியம் எங்கெல்லாம் தனது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நிறுத்தியுள்ளதோ அங்கெல்லாம் அது வன்முறை செய்யும். உளவியல் ரீதியாக வன்முறை நிகழ்த்தும். இழிவாகப் பேசும், மரியாதைக் குறைவாக நடத்தும், தகுதி திறமை இல்லையென்று கேலி செய்யும், எதிர்த்தால் திருட்டுப் பட்டம் கட்டும், தீட்ஷித தர்ஷன்களின் மூலமாக உடல் ரீதியாகத் தாக்குதல் நடத்தும், ஐஐடி சுதர்சன்களைக் கொண்டு தற்கொலைக்குத் தூண்டும். தன்னுடைய நலனுக்காக காஞ்சி சங்கரன்களை வைத்துக் கொலையும் செய்யும். காயத்திரிகளையும் கஸ்தூரிகளையும் ஆபாசமாகப் பேசவைத்து பிரச்சனைகளை மடைமாற்றம் செய்யும்.
காஞ்சி சங்கரன்களையும், ஹெச் ராஜாக்களையும், எஸ்.வி சேகர்களையும் எதுவுமே செய்யாத சட்டமும் நீதியும் சுதர்சனையும் தர்ஷனையும் மட்டுமா ஏதாவது செய்துவிடப் போகிறது. மீசை முறுக்கி ஆண்ட பரம்பரை பெருமை பேசித் திரிபவைகள் எல்லாம் இந்நேரம் பார்பனியத்தின் காலில் விழுந்து சரணாகதி அடைந்திருக்கும் வேண்டுமானால் எஜமான விசுவாசத்திற்காக வன்முறையை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு பார்பனியத்தை காப்பாற்றும்.
பார்பனியத்தின் கொடுமைகளை பெரியாரியமும் அம்பேத்கரியமும் சொற்களால் அறைந்து சொன்னபோதெல்லாம் செவிகளை மூடி அறிவுக்கண்களை திறவாமல் வைத்திருந்த நமக்கு தீட்சிதப் பார்ப்பான் கன்னத்தில் அறைந்து பார்ப்பனீயம் எதுவென்பதைச் சொல்லிவிட்டான். இனியாவது நம் செவிகளும் அறிவுக்கண்களும் திறக்குமா.
க.ம.மணிவண்ணன்

திருவள்ளுவர் இந்துவா?

திருவள்ளுவர் இந்துவா?
---------------------------------------
1) பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் நால்வர்ண இந்துமதக் கருத்துக்கு உடன்படாத உயர்ந்த நெறியான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவர் ஒரு இந்துவா?
2) மாட்டுக்கறி உண்பதை பெருமையோடு விளக்கும் இந்துமத ரிக் வேதக் கருத்துக்கு எதிராக புலால் மறுப்பு பேசிய வள்ளுவர் ஒரு இந்துவா?
3) சுராபானம், சோமபானம் அருந்திய வேதகாலத்தில் கள் உண்ணாமை பேசிய வள்ளுவர் ஒரு இந்துவா?
4) பிறர் மனைவிகளோடு கூடிக் கலந்த கடவுளர் கதைகளுக்கு எதிராக பிறன்மனை நோக்காப் பேராண்மை பேசிய வள்ளுவர் ஒரு இந்துவா?
5) திருவள்ளுவர் இந்து என்றால் அவர் எழுதிய திருக்குறள் வெளிவருவதற்கு இந்து மதத்தலைவர்களும்,அமைப்புகளும் செய்த முயற்சிகள் என்ன? எல்லீஸ் என்ற ஆங்கிலேயரால்தான் திருக்குறள் வெளிஉலகிற்கு தெரியவந்தது என்பது வரலாறு இல்லையா?
6) இந்துமத லோககுரு காஞ்சி சங்கராச்சாரி குறளை ஏற்க மாட்டோம் தீய குறளை ஓத மாட்டோம் என்று சொல்லியது உண்மையா இல்லையா? திருவள்ளுவர் இந்து என்றால் சங்கராச்சாரி கூறியதற்கு ஏன் இந்துமதத் தலைவர்களோ அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
7) எந்த இந்துமதத் தலைவர் திருக்குறள் மாநாடு நடத்தினார். தந்தை பெரியார்தான் முதன்முதலில் திருக்குறள் மாநாடு நடத்தினார் என்பது வரலாறு இல்லையா?
8) அரசுப் பேருந்துகளில் திருக்குறளையும் அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படத்தையும் இடம்பெற வைத்தது அண்ணாவும் கலைஞரும் என்பது வரலாறு இல்லையா?
9) கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை வைக்க கலைஞர் முயன்றபோது அதற்கு ஆதரவு தெரிவித்த இந்துமத அமைப்புகள் எவை? விவேகானந்தர் மண்டபம் அமைக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெரு முனைப்போடு செயல்பட்டது என்பது உண்மைதானே?
10) திருவள்ளுவர் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லி கங்கைக் கரையோரம் அவருக்கு சிலைவைக்க எதிர்ப்புத் தெரிவித்தது வட மாநில இந்து சாமியார்கள் என்பதும் அவர்களுக்கு ஆதரவாக அங்குள்ள சங்கராச்சாரி செயல்பட்டார் என்பதும் உண்மையா இல்லையா?
க.ம.மணிவண்ணன்

தமிழ்நாடு நாள்

தமிழ்நாடு நாள் - நவம்பர் 1
-------------------------------------------
சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா,கர்நாடகா,கேரளம் ஆகியவை மொழிவாரி மாநிலங்களாக பிரிந்து சென்ற பிறகு, 1956 நவம்பர் 1 இந்த நாளில் தான் தமிழகம் தனி மாநிலமானது, சென்னை மாநிலம் ( மெட்ராஸ் ஸ்டேட் ) உருவானது. ஆம் அப்போது அதற்கு தமிழ்நாடு என்ற பெயரில்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் அவர்கள் விரும்பியவாறே மாநிலத்திற்கு பெயர் வைத்துக் கொண்டனர். ஆனால் தமிழகம் மட்டும் மெட்ராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் கன்னியாகுமரி என்ற மாவட்டமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.தமிழர்கள் அதிகளவில் வசித்துவந்த தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய சில பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன.திருத்தணியும், சித்தூர் மற்றும் புத்தூர் மாவட்டங்களின் சிறுபகுதியும் தமிழகத்திற்கு கிடைத்தது.
தமிழுக்கென்று தனி மாநிலம் அமைந்தாலும், அதற்கு சென்னை மாநிலம் என்ற பெயரே தொடர்ந்தது. 1956-ம் ஆண்டிலேயே சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழறிஞர்களும் தொடர்ந்து இந்தப் பெயர் மாற்றத்தை வலியுறுத்தினர்.1957ல் தி.மு.க சட்டமன்றத்தில் கொண்டுவந்த பெயர் மாற்றத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட சங்கரலிங்கனார் 78-ம் நாளில் உயிர்விட்டார். எந்தக் கோரிக்கைக்காகத் தியாகி சங்கரலிங்கனார் தனது உயிரை விட்டாரோ அதை அண்ணா முதல்வராகப் பதவியேற்றபோது நிறைவேற்றிவைத்தார். 1967 ஜூலை 18 அன்று பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார் அண்ணா, அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. 1968 நவம்பர் 23 ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.1969 ஜனவரி 14 அன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் தமிழ்நாடு தனது மொழி, இன உரிமைக்காகக் கட்சி பேதமின்றி பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. தியாகங்களையும் புரிந்திருக்கிறது. அதன் விளைவாகவே இன்றைய தமிழ்நாடு, இந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்தான் அந்த தியாகங்களுக்கான சரியான மரியாதை.
தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பா் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் நவம்பா் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
க.ம.மணிவண்ணன்

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...