Saturday 30 November 2019

வரலாற்றில் இன்று - நவம்பர் 28

வரலாற்றில் இன்று - நவம்பர் 28
* பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து.
* 1893 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில்தான் உலகில் முதன்முதலாக பெண்கள் வாக்களித்தனர்.எலிசபத் ஏக்ஸ் என்ற பெண்மணி மேயர் பதவிக்கு வேட்பாளராகவே நின்றார்.
* 1887ஆம் ஆண்டிலிருந்தே நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
* பெண்களுக்கு நாடு தழுவிய வாக்குரிமை அளிக்க நியூசிலாந்து நாடு முன்வந்து 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி மகளிருக்கான வாக்குரிமை சட்டமாக்கப்பட்டது.
* பெரும் போராட்டங்களுக்கு பின்னணியில் இருந்த கேட் ஷெப்பர்டு (KATE SHEPPARD) என்ற பெண்ணின் தீவிர பிரசாரமும், விடாமுயற்சியும் பெண்களுக்கான வாக்குரிமை பெற்றுக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
* 1780ஆம் ஆண்டுகளிலேயே பிரான்சில் மகளிர் வாக்குரிமைக்கான இயக்கம் தொடங்கப்பட்டுவிட்டது. பின்னர் அது ஸ்வீடனிலும் பரவியது.
* உலக நாடுகள் அனைத்திலும் ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் நிலை இருந்தது.பெண்களுக்கு வாக்குரிமை அளித்தால் குடும்ப அமைப்பு நாசமாகிவிடும்,சமூகம் சீர்கெட்டுவிடும் என்பன போன்ற பிற்போக்கு ஆணாதிக்க கருத்துகள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்காமல் இருக்க காரணங்களாக கூறப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...