Wednesday 29 January 2020

ராஜாஜி (ராஜகோபால்) புரிந்தது நல்லாட்சியா?

ராஜாஜி (ராஜகோபால்) புரிந்தது நல்லாட்சியா?
------------------------------------------------------------------------
முதல்வன் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய உலகமகா அறிவாளி சுஜாதா, ராஜாஜியைப் போல் நல்லாட்சி புரியவேண்டும் என்றொரு வசனம் எழுதியிருப்பார். அப்படியென்ன ராஜாஜி நல்லது செய்துவிட்டார் எனப் பார்ப்போம்.
1) போதிய நிதிவசதியில்லை என்று காரணங்கூறி 1938 ஆம் ஆண்டிலேயே 2500 கிராமப்புற பள்ளிகளை இழுத்து மூடிய அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்காக ரூ. 12 இலட்சம் செலவில் வேத பாடசாலையைத் துவக்கியவர்தான் அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜகோபால் என்பது உங்களுக்குத் தெரியுமா?
2) 1952 ல் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்ததுடன் 6000 பள்ளிகளை இழுத்து மூடியவர்தான் அப்போதைய முதல்வர் ராஜகோபால் என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்த ராஜகோபால் அதன்படி மாணவர்கள் சாதித் தொழிலை செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
4) ராஜகோபால் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பப்பள்ளி பாடநூல்களில் அவரவர் செய்யும் குலத்தொழிலை படத்தோடு போட்டு ஒருமையில் எழுதி அவமதித்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
5) 1937 ல் கல்வி நிலையங்களில் கட்டாய இந்தியைக் கொண்டுவர முயன்றதும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததும், மொழிப்போரட்டத்தில் கலந்துகொண்ட தாளமுத்து நடராசன் என்ற இரு இளைஞர்களும் சிறையிலேயே தங்கள் இன்னுயிரை தியாகம் செய்ததும் ராஜகோபால் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோதுதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
6) தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பும் திட்டத்தை உத்தரவு போட்டு ஒழித்தவர்தான் ராஜகோபால் என்பது உங்களுக்குத் தெரியுமா?
7) வகுப்புவாரி பிரதிநிதுத்வ கொள்கையைக் கண்டிப்பாக ஏற்கக் கூடாதென காந்தியிடம் கடுமையாக வலியுறுத்தி அதில் சூழ்ச்சிகரமாக வெற்றி பெற்றவர்தான் ராஜகோபால் என்பது உங்களுக்குத் தெரியுமா?
8) ராஜகோபால் உள்துறை அமைச்சராக இருந்தபோது பெங்களூர் ராஜி என்ற பார்ப்பன கொலைக் குற்றவாளியை சபாநாயகர் அனந்தசயன அய்யங்காரைப் பயன்படுத்தி கொலைக் குற்றத்திலிருந்து விடுவித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
9) 12 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்ட பார்ப்பன சங்கத் தலைவரான ஆர்.வி.கிருஷ்ணய்யர் என்பவரை அவரது 70 ஆவது வயதில் சென்னை சட்டசபை செயலாளராகப் பணியமர்த்தியதோடு 3 முறை பதவி நீட்டிப்பும் செய்தவர்தான் ராஜகோபால் என்பது உங்களுக்குத் தெரியுமா?
10) 1939 ல் அமைச்சரவையை ராஜினாமா செய்த பிறகும் ராஜகோபாலும் அவரது அமைச்சரவை சகாக்களும் அரசை ஏமாற்றி மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
11) தனது அரசியல் சேவைக்குப் பரிசாக கிண்டி ராஜ்பவன் தோட்டத்தையே தனக்கு எழுதித் தருமாறு அரசிடம் கேட்டவர்தான் ராஜகோபால் என்பது உங்களுக்குத் தெரியுமா?
12) தான் முதலமைச்சராக வந்த இரண்டு முறையும் தேர்தலில் நின்று மக்களிடம் வாக்குப் பெறாமல் கொல்லைப்புறம் வழியாக(மேல் சபை மூலம்) முதலமைச்சர் ஆனவர்தான் ராஜகோபால் என்பது உங்களுக்குத் தெரியுமா?
13) 1952 ல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பதவி ஆசை காட்டி இழுத்து காங்கிரஸ் அமைச்சரவை அமைத்ததன் மூலம் அமித்ஷாவை விட மிகப்பெரிய சாணக்கியனாக விளங்கியவர் ராஜகோபால் என்பது உங்களுக்குத் தெரியுமா?
க.ம.மணிவண்ணன்
10/12/2019

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...