Wednesday 29 January 2020

தேசியக்கொடியும் 3% நூல்களும்

தேசியக்கொடியும் 3% நூல்களும்
---------------------------------------------------
சுதந்திரக் காற்றில் பறப்பதாகச்
சொல்லப்படும் தேசியக்கொடி
எப்போதும் 3% நூல்களாலேயே
கட்டப்பட்டிருக்கிறது
ஏற்றும் கரங்கள் மட்டுமே
மாறிக் கொண்டிருக்கின்றன
நூல்கள் எப்போதும்
அப்படியேதான் இருக்கின்றன
அசோகச் சக்கரத்தைச்
சுழலவிடாமல் கட்டிப்போட்ட கொண்டாட்டத்திலிருக்கும்
அந்த நூல்கள்
கொடி முழுவதையும் காவியாக்கும் வெறியோடுதான் இருக்கின்றன
அந்த நூல்கள் அறுபடாமல் தேசியக்கொடிக்கு மட்டுமல்ல தேசத்திற்கும் விடுதலை இல்லை
க.ம.மணிவண்ணன்
26/01/2020

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...