Wednesday 29 January 2020

அந்த ஒரு நாளில்தான் அது நடந்தது

அந்த ஒரு நாளில்தான் அது நடந்தது
---------------------------------------------------------
சேக்கிழார்
கம்பராமாயணம் எழுதி முடித்த
அந்த ஒரு நாளில்தான்,
பாபா சாகேப்
மரணதண்டனை விதிக்கப்பட்டு
சிறையிலிருந்த
அந்த ஒரு நாளில்தான்,
அடிமைகளின் சூரியன்
ஆபிரகாம் லிங்கனா?
அபிராமிப் பட்டரா?
குழம்பிப் போன
அந்த ஒரு நாளில் தான்,
பகத்சிங்
மாவீரனா? மாவினா?
புரியாத
அந்த ஒரு நாளில்தான்,
எதிர்பாராதவொன்று
எதிரிலே நடந்தது,
ஆம்
புத்தகக் கண்காட்சியைத்
தொடங்கி வைத்துப்
பேருரையாற்றினார்
அந்தப் பெரிய மனிதர்.
க.ம.மணிவண்ணன்
11/01/2010

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...