Wednesday 29 January 2020

சொர்க்கவாசல் திறப்பும் வரலாற்று உண்மையும்

சொர்க்கவாசல் திறப்பும் வரலாற்று உண்மையும்
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற பார்ப்பனர் சீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினார். ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது நாமத்தையே சாத்திவிட்டார் அந்த பார்ப்பனர். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, பொன்னும் பொருளும் தருகிறேன் என்று கூறி, காவிரி ஆற்றில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டார் திருமங்கை ஆழ்வார் - ஓடக்காரன் துணையோடு.
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - ஈமச் சடங்கு செய்யும் இடம்) என்றும் பெயரிட ரெங்கநாதனிடம் வேண்ட, அவரும் அதற்கு அனுமதி அளித்ததோடு அன்று கொல்லப்பட்டவர்க்கெல்லாம் முக்தி(சொர்க்கம்)யும் வழங்கினாராம்
(ஆதாரம்:திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற பக்தி நூல்)
சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று இறுதிச் சடங்கு செய்த அந்தப் பார்வனத்துறைக்கு. சொர்க்கவாசல் மகிமை இப்போது புரிகிறதா?
திருமங்கை ஆழ்வார் வைபவம் எனும் பக்தி நூல் இவ்வாறு கூறுகிறதே - இதன் பொருள் என்ன?
(1) திருமங்கை ஆழ்வார் என்பவன் ஒரு திருடன்.
(2) தொழிலாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுக்காமல் வஞ்சகமாக அழைத்துச் சென்று படுகொலை செய்தவன்.
(3) இந்தப் படுகொலைக்கு சீரங்கநாதன் என்று கூறப்படும் ரெங்கநாதன் என்ற கடவுளும் உடந்தை.
(4) திட்டமிட்டு படுகொலையையும் செய்துவிட்டு, அதனை வஞ்சகமாகப் பக்திப் போதை மாத்திரைகளாக உருட்டிக் கொடுத்து, பக்திப் பரவசமாக்கி - வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு என்று கூறி மக்களை ஆண்டுதோறும் வஞ்சிக்கிறார்கள் – சுரண்டுகிறார்கள்.
பக்தர்களே, உங்கள் முன்னோர்களைப் படுகொலை செய்த நாளைப் பயபக்தியோடு ஏற்கலாமா? இந்தப் பார்ப்பன வஞ்சகத்தை வெறுக்கவேண்டாமா?
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...