Wednesday 29 January 2020

கனவில் வந்த கலாம்

கனவில் வந்த கலாம்
----------------------------------
நேற்றிரவு அயர்ந்த உறக்கம்
உறக்கத்தில் ஒரு கனவு
கனவிலும் உறங்கிக் கொண்டிருந்தேன் நான்
தட்டி எழுப்பினார் முதியவர் ஒருவர்
கண்விழித்து யாரெனக் கேட்டேன்
நான் தான் கலாம் என்றார்
கனவு காணச் சொன்ன கலாமா என்றேன்
ஆம் என்று கூறி அமைதியாய் நின்றார்
கனவு காணச் சொல்லிய நீங்களே
கனவை கலைப்பது முறையா என்றேன்
சின்னதாக புன்னகை செய்தார்.
வீணையும் கீதையும் எங்கே என்றேன்
வெறும் கையுடனேயே வந்தேன் என்றார்
எழுப்பிய காரணம் எதுவெனக் கேட்டேன்
பிறந்து விட்டது 2020
அது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தால்
இந்தியா எப்படி வல்லரசாகும்
கோபமுடன் கேட்டார் கலாம்
வல்லரசு என்றால் என்னவென்று கேட்டேன்
வலிமையான பாரதம் அதுவே என்றார்
புரியும்படி கூறுங்கள்
ஒன்றும் தெரியாத சின்னப்பயல் நானென்றேன்
இராணுவ பலம் மிகுந்துருப்பதுவே
வல்லரசு நாட்டின் இலக்கணமென்றார்
மூன்று வேளை உணவு கிடைக்குமா
வல்லரசாக இந்தியா ஆகி விட்டால்?
நல்லரசாய் இருப்பதுவே காலத்தின் தேவையென்றேன்
புரியாத மொழியினிலே கடுப்பாகத் திட்டிவிட்டு
காணாமல் போய் விட்டார்
பொறியாளராய் இருந்து விஞ்ஞானியாய் அவதரித்த
அந்த மெத்தப்படித்த மேதாவி
மீண்டும் போர்வையைப் போர்த்தி
கனவில் உறங்க ஆரம்பித்தேன் நான்.
க.ம.மணிவண்ணன்
01/01/2020

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...