Wednesday 29 January 2020

ஜன.21 புரட்சியாளர் லெனின் நினைவு நாள்.

ஜன.21 புரட்சியாளர் லெனின் நினைவு நாள்.
--------------------------------------------------------------------
* உழைத்து உழைத்து உருக்குலைந்த மக்களை மேலெழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்.
* மத ஒழுக்கநெறி என்னும் சொற்றொடர்தான் மக்களை இன்னும் ஏமாற்றிக்கொண்டு ஏமாளிகளாக வைத்திருக்கிறது.
* நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனிதகுல விடுதலை சாத்தியமே இல்லை.
* பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு.
* மக்கள் இனி வாழவே வழியில்லை என எண்ணும்போது புரட்சி வெடிக்கும்.
* புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே.
* தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
* தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
* நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே, நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்துமுடி.
- புரட்சியாளர் லெனின்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...