Wednesday 29 January 2020

நுண்ணுயிரியலின் தந்தை லூயிஸ் பாஸ்டியர்

நோய்கள் கடவுள் கொடுத்த தண்டனையல்ல, அது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளின் வேலை என்று கூறியவர் நுண்ணுயிரியலின் தந்தை லூயிஸ் பாஸ்டியர்.
• சில நுண்ணுயுரிகளால் நன்மையும், சிலவற்றால் நோயும் பரவுகிறது எனவும் காற்றிலும் கிருமிகள் உள்ளன எனவும் தெளிவுபடுத்தினார் லூயிஸ் பாஸ்டியர்.
• ரேபிஸ் எனும் வெறிநாய்கடி நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தார். அம்மை நோய்க்கும் தடுப்பூசி கண்டறிந்தார்.
• கால்நடைகளைத் தாக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமியையும், கட்டுப்படுத்தும் மருந்தையும் கண்டுபிடித்தார் லூயிஸ் பாஸ்டியர்.
• லூயிஸ் பாஸ்டியரின் கண்டுபிடிப்புகளைத் தழுவியே காசநோய்,போலியோ போன்ற கொடிய நோய்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
• மருத்துவர்கள் கையுறை அணியும் முறைக்கும் மருத்துவ கருவிகளை கிருமி நீக்கம் செய்து பதனிடும் பெட்டியில் வைத்து பயன்படுத்தும் முறைக்கும் வழிவகுத்தவர் அவரே.
• பட்டுப்புழுக்களை பாதிக்கும் கிருமிகளை கண்டுபிடித்ததுடன் அவற்றிடமிருந்து பட்டுப்புழுக்களை காக்கவும் ஆலோசனை வழங்கினார்.
• உணவுத் துறையில் நுண்ணியிர்களை கட்டுப்படுத்தி உணவு பதனிடும் முறையை உருவாக்கினார்.
• உணவுப் பொருள்களை பதப்படுத்தி பாதுகாக்கும் முறை பாஸ்ச்சரைசேசன் என்று அவரது பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.
• இன்று பலநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு மனிதனின் வாழ்நாள் இரட்டிப்பாகி உள்ளதென்றால் அதில் முதன்மையானதும் முக்கியமானதுமான பங்கு லூயிஸ் பாஸ்டியருக்கும் உண்டு.
அறிஞர் லூயிஸ் பாஸ்டியரின் பிறந்தநாள் இன்று.
க.ம.மணிவண்ணன்
27/12/2019

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...