Wednesday 29 January 2020

வந்திருந்தார் காந்தி

வந்திருந்தார் காந்தி
------------------------------
குடியரசு தின விழாவிற்கு
வந்திருந்தார் காந்தி
எப்போதும் போலவே எளிய தோற்றம்,
விலை உயர்ந்த கோட், சூட், கூலர், ஷு
எதுவும் அவரிடத்தில் இல்லை
மேடையில் ஏறி பேசத்தொடங்கினார்
CAA NRC கூடவே கூடாதென்றார்
சுட்டு வீழ்த்தும் கொலைவெறியோடு
குறிபார்த்துக் காத்திருந்தது
கோட்சேவின் துப்பாக்கி
கோட்சேக்களின் சூழ்ச்சியை அறிந்த
காந்தியின் இடுப்பிலும்
துப்பாக்கி இருந்தது
அவ்வப்போது அதைத் தொட்டுப்
பார்த்துக் கொண்டிருந்தார்
மேடை விட்டு இறங்கிய காந்தி
கோட்சேக்களை முறைத்தபடி விடுவிடுவென நடக்கத் தொடங்கினார்
காலில் விழ வந்தவர்களை
கவனமாகத் தடுத்தார்
தொட்டு வணங்கும் கைகளுக்குள்ளும்
துப்பாக்கி இருக்கும் என்பது
அவருக்குத் தெரிந்திருந்தது
ஹேராம் என ஒருமுறை கூட
உச்சரிக்கவில்லை அவரது வாய்
நாதுராமும் ஹேராமும் வேறு வேறல்ல
இரண்டும் ஒன்றேதான் என்பது
இப்போது அவருக்கு
நன்றாகவே புரிந்திருந்தது
க.ம.மணிவண்ணன்
26/01/2020

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...