Wednesday 29 January 2020

வானில் தோன்றும் நெருப்பு வளையம்(சூரிய கிரகணம்) – அறிவியலும் மூடநம்பிக்கையும்



வானில் தோன்றும் நெருப்பு வளையம்(சூரிய கிரகணம்) – அறிவியலும் மூடநம்பிக்கையும்
இன்று வானில் தோன்றிய வளைய சூரிய கிரகணத்தை நம்மில் பலபேர் solar filter வழியாகவோ தொலைக்காட்சியிலோ கண்டிருப்போம். இயற்கை நிகழ்வான இந்த சூரிய கிரகணத்தை பற்றிய அறிவியல் தகவல்களை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சூரிய கிரகணத்தின் வகைகள்:
-----------------------------------------------
சூரிய கிரகணத்தில் முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்று பொதுவாக மூன்று வகை உள்ளது. இது தவிர நெருப்பு வளைய சூரிய கிரகணமும் பகுதி சூரிய கிரகணமும் இணைந்த கலப்பின சூரிய கிரகணம் என்ற வகையும் உள்ளது.
சூரிய கிரகணம் எதனால் ஏற்படுகிறது?
------------------------------------------------------------
சந்திரன், பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் அமாவாசையன்றே சூரிய கிரகணம் உண்டாகும். இவ்வாறு அவை ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருக்கும் சந்திரன், சூரியனை நம் பார்வையிலிருந்து மறைத்து விடுவதே சூரிய கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை அன்றுதான் உருவாகும் ஆனால் எல்லா அமாவாசையிலும் உருவாகாது.
பூமிக்கு மிக அருகில் சந்திரன் இருக்கும்போது சூரியனின் அளவும் சந்திரனின் அளவும் நம் பார்வைக்கு ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் சந்திரன் சூரியனை முழுமையாக நம் பார்வையிலிருந்து மறைத்துவிடும். இது தான் முழு சூரிய கிரகணம்.
பூமிக்கு மிகத் தொலைவில் சந்திரன் இருக்கும் போது நம் பார்வைக்கு சூரியனைவிட சந்திரன் சிறியதாக இருக்கும் அப்போது சூரியனின் நடுப்பகுதியை மட்டுமே சந்திரானால் நம் பார்வையிலிருந்து மறைக்க முடியும். சூரியனின் விளிம்புப் பகுதி ஒளி வீசும் நெருப்பு வளையம்போல் காணப்படும். இதுதான் இன்று தோன்றிய நெருப்பு வளைய சூரிய கிரகணம்.
சந்திரனானது சூரியனை பகுதி அளவில் மறைக்கும் பொழுது, உண்டாவது பகுதி சூரிய கிரகணம்.
கிரகணம் பற்றிய மூடநம்பிக்கைகள்:
---------------------------------------------------------
ராகு கேது ஆகிய பாம்புகள் சூரியனை விழுங்கி விடுவதாலேயே கிரகணங்கள் தோன்றுவதாக மூட நம்பிக்கை நிறைந்த கதைகள் சொல்லப்படுகிறது, கிரகண நேரத்தில் நீர் அருந்தக் கூடாது, உணவு உண்ணக்கூடாது,கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்று சொல்லப்படுபவை எல்லாம் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையே. கடவுள்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோவில்கள் கூட கிரகண நேரத்தில் மூடப்படுவது அதிகபட்ச வேடிக்கை.
க.ம.மணிவண்ணன்.
26/12/2019

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...