Wednesday 29 January 2020

இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் கருத்துகள்



இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் கருத்துகள்
1. உலகம் (பிரபஞ்சம்) உருவாவதற்கு முன்பு மிகப் பெரும் வெற்றிடம் இருந்தது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை; கடவுள் உருவாக்கவும் இல்லை. மதவாதிகள் கூறுவது போல், உலகத்துக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. கடவுள் வந்து, தடவிப் பார்த்து, உலகமே நீ உருவாகு என்றவுடன் உலகம் உருவாகியதாக கூறுவது அபத்தமானது.
2. எனக்கு நானே இரண்டு கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறேன். முதல் கேள்வி, இந்த பிரபஞ்சம் உருவானதற்கான காரணம், நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காகவே கடவுள், இந்த உலகை உருவாக்கினார் என்பது சரியா? இது முதல் கேள்வி. அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில், உலகம் (பிரபஞ்சம்) உருவானதா என்பது இரண்டாவது கேள்வி.
இதில் இரண்டாவது கேள்வியையே நான் ஆதரிக்கிறேன். இயற்பியல் கோட்பாடுகள்தான் பிரபஞ்சத்தை உருவாக்கியது. இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதில், எந்தக் கடவுளும் உரிமை கோர முடியாது என்பதே எனது உறுதியான கருத்து.
3. பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருண்ட குகைகள் (black holes) இருக்கின்றன. ஆனால், அந்த இருட்டை விட, விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் இருட்டுதான் மிக‌வும் ஆபத்தானது.
4. பல கோடிக்கணக்கான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் என்பதற்காகவே அந்த ஆதார‌ம‌ற்ற‌ பொய்யை சுய‌சிந்த‌னையுள்ள எந்த மனிதனும் ஏற்கத் தேவையில்லை.
5. கடவுள் என்ற ஒரு த‌னி ச‌க்தி இருந்தால் கூட அதுவும் இயற்பியல் விதிகளுக்கு கீழ்படியும் கடவுளாகத்தான் இருக்கமுடியும்.
6. நல்ல‌வேளை "பெருவெடிப்பு" பற்றிய என் உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்கு புரியவில்லை. இல்லையென்றால் எனக்கும் கலீலியோக்கு நேர்ந்த அதே கதிதான் நேர்ந்திருக்கும்.
7. விஞ்ஞானத்தின் முன் மதம் மண்டியிட வேண்டும். விஞ்ஞானம் ம‌த‌த்திற்குமுன் ஒருபோதும் மண்டியிடக்கூடாது.விஞ்ஞான‌ம் ஆதார‌ங்க‌ளின், தெளிவுக‌ளின், நிரூப‌ண‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் ஆன‌து.
8. உங்க‌ள் அன்றாட‌ வாழ்வின் செளக‌ரிய‌ங்க‌ளும் வ‌ச‌திக‌ளும் விஞ்ஞான‌ம் அளித்த‌ வ‌ர‌மா அல்ல‌து ம‌த‌ம் கொடுத்த‌ அதிச‌ய‌மா என்று ந‌டுநிலையோடு சிந்தித்தால் உங்க‌ளுக்கே அது புரியும்.
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பிறந்த நாள் (ஜன.08) இன்று

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...