Saturday 30 November 2019

திருவள்ளுவர் இந்துவா?

திருவள்ளுவர் இந்துவா?
---------------------------------------
1) பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் நால்வர்ண இந்துமதக் கருத்துக்கு உடன்படாத உயர்ந்த நெறியான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவர் ஒரு இந்துவா?
2) மாட்டுக்கறி உண்பதை பெருமையோடு விளக்கும் இந்துமத ரிக் வேதக் கருத்துக்கு எதிராக புலால் மறுப்பு பேசிய வள்ளுவர் ஒரு இந்துவா?
3) சுராபானம், சோமபானம் அருந்திய வேதகாலத்தில் கள் உண்ணாமை பேசிய வள்ளுவர் ஒரு இந்துவா?
4) பிறர் மனைவிகளோடு கூடிக் கலந்த கடவுளர் கதைகளுக்கு எதிராக பிறன்மனை நோக்காப் பேராண்மை பேசிய வள்ளுவர் ஒரு இந்துவா?
5) திருவள்ளுவர் இந்து என்றால் அவர் எழுதிய திருக்குறள் வெளிவருவதற்கு இந்து மதத்தலைவர்களும்,அமைப்புகளும் செய்த முயற்சிகள் என்ன? எல்லீஸ் என்ற ஆங்கிலேயரால்தான் திருக்குறள் வெளிஉலகிற்கு தெரியவந்தது என்பது வரலாறு இல்லையா?
6) இந்துமத லோககுரு காஞ்சி சங்கராச்சாரி குறளை ஏற்க மாட்டோம் தீய குறளை ஓத மாட்டோம் என்று சொல்லியது உண்மையா இல்லையா? திருவள்ளுவர் இந்து என்றால் சங்கராச்சாரி கூறியதற்கு ஏன் இந்துமதத் தலைவர்களோ அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
7) எந்த இந்துமதத் தலைவர் திருக்குறள் மாநாடு நடத்தினார். தந்தை பெரியார்தான் முதன்முதலில் திருக்குறள் மாநாடு நடத்தினார் என்பது வரலாறு இல்லையா?
8) அரசுப் பேருந்துகளில் திருக்குறளையும் அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படத்தையும் இடம்பெற வைத்தது அண்ணாவும் கலைஞரும் என்பது வரலாறு இல்லையா?
9) கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை வைக்க கலைஞர் முயன்றபோது அதற்கு ஆதரவு தெரிவித்த இந்துமத அமைப்புகள் எவை? விவேகானந்தர் மண்டபம் அமைக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெரு முனைப்போடு செயல்பட்டது என்பது உண்மைதானே?
10) திருவள்ளுவர் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லி கங்கைக் கரையோரம் அவருக்கு சிலைவைக்க எதிர்ப்புத் தெரிவித்தது வட மாநில இந்து சாமியார்கள் என்பதும் அவர்களுக்கு ஆதரவாக அங்குள்ள சங்கராச்சாரி செயல்பட்டார் என்பதும் உண்மையா இல்லையா?
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...