Thursday 26 April 2018

மன்னிக்காதே மகளே ஆசிஃபா

மன்னிக்காதே மகளே ஆசிஃபா
கடவுள் இருக்கிறார் என உனக்கும் சொல்லப்பட்டிருக்கும், அழைத்த குரலுக்கு ஓடி வருவார் என உனக்கும் சொல்லப்பட்டிருக்கும், அநீதி நடக்கும் போதெல்லாம் அதைத் தடுக்க ஆண்டவன் வருவான் என உனக்கும் சொல்லப்பட்டிருக்கும். கடவுளை வழிபட நீயும் பழக்கப்பட்டிருப்பாய். உனக்கு நேர்ந்த கொடுமையின் போது கடவுளை அழைத்திருப்பாய் கதறிக் கதறி. கடவுள் வந்து காப்பாற்றுவார் என கடைசி வரை நம்பி இருப்பாய். நீ கதறி அழும்போது ஏனென்று கேட்க வராத அந்த கடவுள்கள் முகத்தில் காறித்துப்பு. மகளே ஆசிஃபா அந்த கேடுகெட்ட கடவுள்களை ஒரு போதும் மன்னிக்காதே.
ஒழுக்கத்தை போதிப்பதில்லை மகளே எந்த மதமும், நன்னடத்தையையும் நன்னெறியையும் சொல்லித்தருவதில்லை மகளே எந்த மதமும், பெண்ணைப் போகப் பொருளாகவும், அடிமையாகவும், வெறும் பாலுறுப்பாகவும் மட்டுமே பார்க்கச் சொல்லித் தரும் எல்லா மதங்களின் மீதும் மத நூல்களின் மீதும் காறித்துப்பு. மகளே ஆசிஃபா இந்த அயோக்கிய மதங்களையும் மத நூல்களையும் ஒரு போதும் மன்னிக்காதே.
உனக்கு நேர்ந்த வன்கொடுமை என்னவென்று அறிவாயா மகளே. இந்த முகத்தைப் பார்த்துமா அந்த கயவர்களுக்கு எழுந்தது காமவெறி. இதிலும் மத அரசியல் கலந்திருக்கிறது மகளே. இந்த கயவர்கள் தான் தூய ராமராஜ்யம் அமைக்கப் பாடுபடும் காட்டுமிராண்டிகள். இந்த கயவர்களுக்கு ஆதரவு மதவாத பி.ஜே.பி யின் தேசபக்தி பரிவாரங்கள். இந்த கொலைகார காமவெறி பிடித்த மதவாதிகள் முகங்களிலும் இவர்களை ஆதரிக்கும் மதவாத கட்சியினர் முகங்களிலும் காறித்துப்பு. மகளே ஆசிஃபா இந்த கயவர்களையும் அவர்களை ஆதரிக்கும் காட்டுமிராண்டிகளையும் ஒரு போதும் மன்னிக்காதே.
பெண்களுக்கு வன்கொடுமை நிகழும்போதெல்லாம் வகுப்பெடுக்க வருவார்கள் கலாச்சார காவலர்கள். பெண், எங்கே போக வேண்டும்,எப்போது போகவேண்டும், யாருடன் போகவேண்டும்,என்ன உடுத்த வேண்டும் என்று அறிவுரை சொல்லுகிற ஒழுக்க சிகாமணிகள். அவர்கள் முகங்களிலும் காறித்துப்பு. மகளே ஆசிஃபா இந்த கலாச்சார காவலர்களையும் ஒரு போதும் மன்னிக்காதே.
உன்னைப்போல் ஒரு மகளை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழ மட்டுமே முடிகிற, வேறெதுவும் செய்ய இயலாத இந்த அப்பனின் முகத்திலும் காறித்துப்பு. மகளே ஆசிஃபா இந்த அப்பனையும் ஒரு போதும் மன்னிக்காதே.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...