Thursday 26 April 2018

ஒன்னு முட்டாப் பீசு, இன்னொன்னு மொரட்டுப் பீசு

--------------------------------------------------------------------------------
ஒன்னு முட்டாப் பீசு, இன்னொன்னு மொரட்டுப் பீசு
--------------------------------------------------------------------------------
நான் பல நேரங்களில் நினைப்பதுண்டு எப்படி ஒரு கட்சியில் இருக்கும் எல்லோரும் ஒன்னு முட்டாப் பீசாகவோ இல்லைனா மொரட்டுப் பீசாகவோ அல்லது இரண்டும் சேர்ந்த கலவையாகவோ இருக்கிறார்கள் என்று. ஒருவேளை அந்த கட்சியில் இருப்பதால் அப்படி இருக்கிறார்களா அல்லது அப்படிபட்டவர்களைத்தான் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. முட்டாள் தனத்தையும் முரட்டுத்தனத்தையும் சோதித்த பிறகே கட்சியில் உறுப்பினராக சேர்த்துக்கொள்வார்கள் போலிருக்கிறது. அவரவர் முட்டாள் தனத்திற்கும் முரட்டுத்தனதிற்கும் ஏற்றபடி கட்சியல் பதவியும் பொறுப்பும் கொடுப்பார்கள் போலிருக்கிறது.
புராண காலத்திலேயே மரபணு விஞ்ஞானம் இருந்தது என்று கர்ணன் பிறப்பையும் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று விநாயர் உருவத்தையும் எடுத்துக்காட்டாக கூறிய ஒருவரை மதக்கலவரத்தில் இறந்துபோனவர்களை காரில் அடிபட்டு சாகும் நாய் குட்டியோடு ஒப்பிட்ட ஒருவரை பிரதமராக வைத்திருக்கும் ஒரு கட்சியில் உள்ள மற்றவர்கள் முட்டாப் பீசாகவோ இல்லைனா மொரட்டுப் பீசாகவோ அல்லது இரண்டும் சேர்ந்த கலவையாகவோ இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அந்த கட்சியின் தலைவரே அந்த கட்சியின் மாநிலத் தலைவரை மிகப்பெரிய ஊழல்வாதி என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு.
சூரிய விரதம் இருந்தால் சூரியனின் வெப்பம் குறைந்து மழை பெய்யும் என்றும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுத்தால் சூரியன் கோபப்படுவார் என்று சொன்னவர்கள் இந்த கட்சியில் உள்ள முட்டாப் பீசுகள் தான்.இதே போன்று சில நாட்களுக்கு முன்னால் மகாபாரத காலத்திலேயே இணையதளமும் செயற்கைக்கோளும் இருந்தது என்று சொல்லியது ஒரு முட்டாப் பீசு.
மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் சரியாகிவிடும் என்று ஒரு முட்டாப் பீசு சொன்னதை நன்கு உள்வாங்கிய தொண்டன் ஒருவன் மாட்டு மூத்திரத்திற்கே இவ்வளவு சக்தி என்றால் மாட்டைப் புணர்ந்தால் எவ்வளவு சக்தி கிடைக்கும் என்று நினைத்து மாட்டை வன்புணர்வு செய்துவிட்டான் தலைவர்களே முட்டாப் பீசாகவும் மொரட்டுப் பீசாகவும் இருக்கும்போது தொண்டனும் அப்படித்தானே இருப்பான்.
இதுமட்டுமில்லாமல் கட்சியில் உள்ள மொரட்டு பீசுகள் பாலியல் வன்புணர்விலும் ஈடுபட்டு வருகின்றன. அவ்வப்போது மதக்கலவரத்தை தூண்டும் விதமாகப் பேசி வெட்டு குத்து கொலை என கொண்டுவந்து விடுகின்றன. இப்படிப்பட்ட முட்டாப் பீசுகளும் மொரட்டுப் பீசுகளும் சூழ்ந்த நாட்டில் நாம் வாழ்வது நமக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய தண்டனை.
இப்படிப்பட்டதுகள் தேசிய அளவில் மட்டுமல்ல இங்கேயும் இருக்கின்றன. அதுல ஒன்னு முட்டாப் பீசு இன்னொன்னு மொரட்டுப் பீசு.
மொரட்டுப் பீசோட வேலை எல்லோரையும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசி அதன் மூலமா வன்முறைய தூண்டி ஏதாவது கலவரத்த உண்டாக்க முடியுமான்னு பார்க்கிறதுதான், அடிக்கணும் உதைக்கணும் வெட்டனும் குத்தனும் உடைக்கணும்னு பேசுறது தான் இந்த மொரட்டுப் பீசு செய்யுறது. அது மட்டுமில்லாம ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறது இந்த மொரட்டு பீசு.
எதிர்ப்பு நிறைய வந்த உடனே எனக்குத் தெரியாம என்னோட அட்மின் இப்படி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டு தப்பித்துக்கொள்ளும். ஏதோ வெறி நாய் கொலைக்குதேன்னு எல்லாரும் கண்டும் காணாம இருக்காங்க. எங்கேயாவது முட்டுச் சந்துல தனியா மாட்டும்போது ஊரே சேர்ந்து மொத்தும்னு நெனைக்கிறேன்.
2000 ரூபாய் நோட்டுல சிப்பு இருக்குனு சொல்லிச்சு இங்க இருக்கிற முட்டாப் பீசு. இத உண்மைன்னு நம்பி இத எல்லாருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்ததுகள் சங்கி மங்கிகள். சமஸ்கிருதம் படிச்சா அறிவு வளரும்னு சொல்லுச்சு ஆனா ஏற்கனவே இந்த மொழி செத்த மொழி ஆயிருச்சு அத படிச்சா அறிவு வளர்றது இருக்கட்டும் அந்த மொழியே வளரலையே.
பிராமணர்கள் நடத்தும் நிறுவனத்துல இருந்து திராவிடர்கள் வெளியேறணும்னு சொல்லுச்சு இந்த முட்டாப் பீசு. புரோட்டாக் கடையில புரோட்டா போடுறவர் புரோட்டா மாஸ்டர் அவரு முதலாளி கிடையாது, நீங்க புரோட்டா மாஸ்டர்னா நாங்க சப்ளையர் அவ்வளவு தான். நீங்களே ஆடு மாடு ஓட்டிக்கிட்டு பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிங்க நீங்கதான் இங்கே இருந்து ஓடனும்.
இந்தியாவுல நோபல் பரிசு வாங்குனது எல்லாமே பிராமணர்கள்தான்னு சொன்னதும் இதே முட்டாப் பீசு தான். 2000 வருசமா எங்கள படிக்கவே விடல நீங்க மட்டுந்தானே படிச்சீங்க 2000 வருசமா படிச்சும் 4 பேரோ 5 பேரோ தான் வாங்கி இருக்கீங்க நாங்க இப்பதானே படிக்க ஆரம்பிச்சுருக்கோம். இனிமே தெரியும் யாரு வாங்குவாங்கன்னு.
2 நாளைக்கு முன்னாலே பெண் நிருபர்களையும் செய்தியாளர்களையும் அசிங்கமா இந்த முட்டாப் பீசு பேசியிருந்துச்சு ஒருவேளை அவங்களோட குலப்பெருமையத் தான் சொன்னுச்சு போல. அரசர்கள் ஜமீன்தார்கள் வெள்ளைக்காரர்கள் கிட்ட இருந்து சொத்து நிலம் வசதி வாய்ப்பு வேலை இதெல்லாம் எப்படி வாங்குனாங்கன்னு நமக்கு தெரியாதா என்ன.
இது இப்ப சொல்றத இதுக்கு சாப்பாடு சப்ளை பண்ண ஹோட்டல் முதலாளி ரெம்ப வருசத்துக்கு முன்னாலேயே சொல்லியிருக்கு வேலைக்கு போற பெண்கள் எல்லாம் பத்தினி இல்லைன்னு, அந்த ஆளும் முட்டாத்தனமும் மொரட்டுத்தனமும் சேர்ந்த கலவை தான். காக்கா பிரியாணி தின்னா காக்கா குரல்தானே வரும்கிற மாதிரி அந்த ஆளோட .........ய தின்னா அந்த ஆளோட புத்திதானே வரும் இதுக்கும். அது நான் எழுதுனது இல்ல எனக்கு வந்த பதிவ படிக்காம பார்வர்டு பண்ணிட்டேன்னு பதிவ நீக்கீட்டு மன்னிப்பு கடிதம் எழுதிவச்சிட்டு எங்கேயோ ஓடிப் போயிருச்சு இந்த முட்டாப் பீசு.
எங்கேயாவது பன்னியப் பாத்தா இந்த முட்டாப் பீசுதான் ஞாபகத்துக்கு வருது. எனக்கும் மட்டும்தான் அப்படி வருதா.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...