Friday 6 April 2018

நீங்களே சொல்லுங்கள் - உங்களுக்கு வேண்டுமா ராமராஜ்ஜியம்

நீங்களே சொல்லுங்கள் - உங்களுக்கு வேண்டுமா ராமராஜ்ஜியம்
அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான் ராமன் வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளின் படியும் பார்ப்பனர்களின் வழிகாட்டுதல் படியும்.
அரண்மனையில் வீற்றிருந்தான் ராமன், அரண்மனை வாசலில் பெரும் சத்தம் ராமா வெளியே வா, ராமா வெளியே வா என்று. நாடாளும் மன்னனையும் ஒருமையில் அழைக்க யாரால் முடியும் ஆம் அது பார்ப்பானே தான்.
குரல் கேட்டு பயத்துடன் வெளியில் ஓடி வந்தான் ராமன், இறந்து போன தன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான் பார்ப்பான். என்ன நடந்தது என்று பதட்டத்தோடு கேட்கிறான் ராமன், உன் ஆட்சி சரியில்லை அதனால் தான் என் பிள்ளை இறந்து விட்டது என்கிறான் பார்ப்பான். புரியும்படி சொல்லுங்கள் என்று கெஞ்சுகிறான் ராமன்.
சம்பூகன் என்றொரு சூத்திரன் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கிறான் நாங்கள் வகுத்து வைத்த நீதியை மீறி அதனால் தான் என் பிள்ளை இறந்தது என்கிறான் பார்ப்பான். அவன் தவம் செய்வதற்கும் உன் பிள்ளை இறந்ததற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கவில்லை அந்த முட்டாள் ராமன் காரணம் பார்பனர்கள் மேல் அவனுக்கிருந்த அளவு கடந்த பாசம்.
கோபத்தோடு விரைகிறான் ராமன் காட்டை நோக்கி, தவம் செய்யும் சம்பூகனை காண்கிறான் அங்கே, எடுத்தான் வாளை கொய்தான் தலையை சமூக நீதியைக் கொன்றான் அயோக்கிய ராமன். படித்தால் நாக்கை வெட்ட வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும், மனதில் இருத்தினால் நெஞ்சை பிளக்க வேண்டும் என்ற பார்ப்பன நீதியை நிலை நாட்டினான் கொலைகார ராமன்.
தவம் என்பதை நாம் கல்வியின் குறியீடாகவே பார்க்க வேண்டும், கல்வி கற்ற சூத்திரனின் தலையை வெட்டிக் கொன்றான் ராமன். சம்பூகனின் பிள்ளைகளே ராம ராஜ்ஜியம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் . இப்போது இருப்பதும் ராமராஜ்ஜியத்தின் நீட்சி தான். நீட் என்பதும் ராமன் நிலைநாட்டிய பார்ப்பன நீதியின் நீட்சிதான். அனிதாவும் சம்பூகனின் நீட்சி தான்.
சம்பூகனின் பிள்ளைகளே தலை இழக்க உங்களுக்கு சம்மதமா, நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு வேண்டுமா ராமராஜ்ஜியம்.
க.ம.மணிவண்ணன்
22/03/18

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...