Friday 23 November 2018

நவம்பர் 8 - பன்னாட்டுக் கதிரியல் நாள் (International Day of Radiology)

நவம்பர் 8 - பன்னாட்டுக் கதிரியல் நாள் (International Day of Radiology)
இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். எக்சு-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. கதிரியலுக்கான ஐரோப்பியக் கழகம், மற்றும் கதிரியலுக்கான அமெரிக்கக் கல்லூரி ஆகியன இணைந்து 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின.
செர்மானிய இயற்பியலாளர் வில்கெல்ம் இராண்ஜன் (1845-1923) 1895 நவம்பர் மாதம் எட்டாம் நாள் எக்சு கதிர்களை கண்டுபிடித்தார். அதற்காக அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1901-ல் பெற்றார். இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு இதுவாகும். அனைத்துத் துறைகளிலும் அதிலும் சிறப்பாக மருத்துவத் தறையிலும் பெரும் பரட்சியினை அவர் கண்ட இக்கதிர்கள் ஏற்படுத்தின. அவரது பங்களிப்பினை போற்றும் வகையில் அணு எண் 111 கொண்ட தனிமம் இராண்ஜனியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எக்ஸ் கதிர்கள் (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை.இதனைக் கண்டுபிடித்த வில்ஹெம் ராண்ட்ஜன் என்பவரின் பெயரால் ராண்ட்ஜன் கதிரிவீச்சு என்றும் சில மொழிகளில் அழைக்கப்படுகிறது.
வில்ஹெம் இராண்ட்ஜன் கண்டுபிடித்ததிலிருந்து எக்ஸ்-கதிர்கள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன. எக்ஸ்-கதிர்கள் மருத்துவப் படிமவியலில் பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ்-கதிரின் முதலாவது மருத்துவப் பயன்பாடானது அவரது கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தது.
X கதிர்கள் மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், வானூர்தி தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன. இப்பண்பே அவைகள் நோயறி கதிரியலில் (Diagnostic Radiology) கதிர்ப்படம் எடுக்கப் பயன்படுகிறது.இக்கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பண்பு அவைகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும். இம்முறை கதிர் மருத்துவம் (Radiation therapy) எனப்படும். இக்கதிர்கள் CT scannerல் பிரதான ஊடுருவும் மின்காந்த அலையாக உள்ளது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...