Friday 23 November 2018

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 
தமிழ்க்கவிதையில் எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில், தளங்களில் பயணித்தது.பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 -அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு . இப்போது அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் 'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர்.
பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறையை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும்,வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதிய‌வர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
மக்கள் கவிஞரின் பாடல் வரிகள்
----------------------------------------------------
'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'
'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'
'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒழச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'
'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது'
'மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா
தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...