Friday 23 November 2018

பாண்டி புலிப்பால் குடித்த கதை

பாண்டி புலிப்பால் குடித்த கதை
-------------------------------------------------
ஒரு ஊருல பாண்டி பாண்டின்னு ஒருத்தன் இருந்தான் அவன் பக்கத்து ஊருல உள்ள காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தான், ஒருநாளு அவங்கூட படிக்கிற பயல ஊருக்கு கூட்டிட்டுப் போனான், ஊருல உள்ளவங்கள்லாம் பாண்டிய புலிப்பால் பாண்டி, புலிப்பால் பாண்டின்னு கூப்புடறத கேட்டுட்டு அவனோட பிரண்டு ஏன் உன்னைய எல்லாரும் புலிப்பால் பாண்டின்னு கூப்புடுறாங்கன்னு கேட்டான், அதுக்கு பாண்டி நா குழந்தையா இருக்கும்போது ஒரு நாளு என்னைய தரையில படுக்க வச்சுட்டு எங்கம்மா வயலு வேலைக்கு போயிருச்சு, தூங்கி எந்திருச்ச எனக்கு பயங்கரமான பசி என்னால தாங்க முடியல அழுதுகிட்டே இருந்தேன், அந்த நேரம் அந்த பக்கமா ஒரு புலி வந்துச்சு, அது நா பசியாலா அழுகுறத பாத்துட்டு மனசு தாங்க முடியாம எனக்கு பால் குடுத்துச்சு, நா குடிச்சு முடிச்சதும் எனக்கு முத்தம் கொடுத்துட்டு போயிருச்சு, புலிப்பால நா குடிச்சதுனால எல்லாரும் என்னைய புலிப்பால் பாண்டின்னு கூப்புடுறாங்கன்னு சொன்னான் இதக்கேட்டதும் அவனோட பிரண்டுக்கு சிரிப்பு தாங்க முடியல இருந்தாலும் அடக்கிக்கிட்டான்.
கொஞ்ச நேரம் கழிச்சு பாண்டி கடைக்கு போயிட்டு வாறேன்னு சொல்லிட்டு வெளிய போனதும், அவனோட பிரண்டு பாண்டி அம்மாக்கிட்ட பாண்டிக்கு ஏன் புலிப்பால் பாண்டின்னு பேரு வந்துச்சுன்னு கேட்டான், அதுக்கு அந்த அம்மா பாண்டி சின்னப் புள்ளயா இருக்கும்போது, வெள்ளையா இருக்கவும் பாலுன்னு நெனச்சு மோர எடுத்துக் குடிச்சுட்டான் அதாவது பரவாயில்ல குடிச்சு முடிச்சதும் என்னம்மா பால் புளிக்குதுன்னு கேட்டான், அதக் கேட்டதும் சுத்தி இருந்தவங்கள்லாம் குடிச்சது மோருதான்னு கூடத் தெரியாம பாலு புளிக்குதுன்னு சொல்றானேன்னு சொல்லி பயங்கரமா சிரிச்சுட்டாங்க, அன்னையில இருந்து அவன புளிப்பால் பாண்டி, புளிப்பால் பாண்டின்னு எல்லாரும் கிண்டலா கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க அப்படின்னு சொன்னாங்க.

# ஆண்ட ஜாதிப்பெருமைகள்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...