Friday 23 November 2018

கோவக்கார குருவும், சின்னாபின்னமான சீடனும்

கோவக்கார குருவும், சின்னாபின்னமான சீடனும்
-----------------------------------------------------------------------------
ஒரு ஊருல ஒரு குரு இருந்தாரு அவருக்கு நெறைய சீடனுக இருந்தானுக, ஒரு நாளு அந்த குரு கோவத்தை அடக்குறது எப்படின்னு சீடனுகளுக்கு வகுப்பு எடுத்துக்கிட்டு இருந்திருக்காரு, அப்ப ஒரு சீடன் எந்திரிச்சு குருவே நீங்க நடத்துற பாடம் புரியலன்னு தைரியமா சொல்லி இருக்கான் உடனே குருவுக்கு கோவம் வந்துருச்சு அந்த சீடன புடுச்சு அடிஅடின்னு அடிச்சு தூக்கிபோட்டு மிதிச்சிக்கிட்டு இருந்துருக்காரு, அப்ப அந்தப் பக்கமா வந்த ஒருத்தரு என்ன குருவே ஒரு சின்ன பையன போட்டு இந்த அடி அடிக்கிறீங்களேன்னு கேட்டுருக்காரு, அதுக்கு அந்த குரு எப்படி கோவத்த அடக்குறதுன்னு பாடம் நடத்திக்கிட்டு இருக்கும்போது இவன் எந்திருச்சு பாடம் புரியலன்னு சொல்றான் அதான் எனக்கு கோவம் வந்து அவன தூக்கிப்போட்டு மிதிச்சுக்கிட்டு இருக்கேன், அதுசரி இப்ப நீ எதுக்கு வந்து அத கேக்குற ஒன்னோட வேல மயிரப் பாத்துக்குட்டு போய்யான்னு வந்தவர அசிங்கம் அசிங்கமா திட்ட ஆரம்பிச்சிட்டாரு, வந்தவரும் தெறிச்சு ஓடிட்டாரு.
# நடிகர் சிவக்குமார் பரிதாபங்கள்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...