Monday 6 August 2018

சிலை திருடிகளின் கதை

சிலை திருடிகளின் கதை
----------------------------------------
ஹரஹர மஹாதேவகி
ஒரு ஊருல கணபதி அய்யரு கணபதி அய்யருன்னு ஒருத்தரு இருந்தாரு அவருக்கு கிச்சா கிச்சான்னு ஒரு புள்ளாண்டான் இருந்தான், ரெண்டு பேரும் ஒரு கோவில்ல அர்சகரா இருந்தாங்க, அந்த கோவில்ல ஒரு அம்பாள் சிலை இருந்துச்சு கணபதி அய்யருக்கு அம்பாள் சிலை மேல ரெம்ப நாளாவே ஒரு கண்ணு இத எப்படியாவது திருடி வித்துறனும்னு ஒரு நாளு யாருக்கும் தெரியாமா அந்த சிலைய தூக்கிட்டுப்போயி நல்ல வெலைக்கி வித்திட்டாரு,அதுக்குப் பதிலா வேறொரு டூப்ளிகேட் சிலைய கொண்டு வந்து வச்சுட்டாரு.அவரு புள்ளாண்டானுக்கும் ஒரு ஆச எப்படியாவது சிலைய திருடி வித்துறனும்னு, அவனோட தோப்பனார மாதிரியே யாருக்கும் தெரியாம சிலைய திருடி வித்திட்டு அதுக்குப் பதிலா வேறொரு சிலைய கொண்டாந்து வச்சுட்டான். காலையில கணபதி அய்யரு சிலைய குளிப்பாட்டும்போதுதான் தெரியுது அது அம்பாள் சிலை இல்ல ஒரு ஆம்பள சிலையின்னு அவருக்கு ஒரே ஆச்சரியம் அம்பாள் சிலை எப்படி ஆம்பள சிலையா மாறுச்சுன்னு, இத தன்னோட புள்ளாண்டன்கிட்ட சொல்றாரு அதுக்கு அவன் என்னைய மன்னிச்சுக்குங்க நான்தான் சிலைய திருடி வித்துட்டேன் தவறுதலா ஆம்பள சிலையைக் கொண்டாந்து வச்சுட்டேன்னு சொல்லி அழுதான், அதுக்கு கணபதி அய்யரு இதுக்குப் போயி ஏண்டா அழுகுற நானாவது ஒரிஜினல் சிலைய திருடி வித்தேன் நீ டுப்ளிகேட் சிலையவே வித்திருக்கியே நீ பெரிய கெட்டிகாரன்டா,தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்டான்னு சொல்லி ரெம்ப சந்தோசப்பட்டாரு.தோப்பனார்கிட்ட புள்ளாண்டான் கேட்டான் ஆம்பள சிலையா இருக்கே மாத்திறலாமான்னு அதுக்கு கணபதி அய்யரு இங்க சாமி கும்புட வர்றவனுகளுக்கு அது அம்பாள் சிலையா ஆம்பள சிலையான்னு தெரியாது ஏதோ ஒரு கல்லு இருந்தா போதும் கும்புட்டுட்டு போய்கிட்டே இருப்பானுக, அவனுக நம்ம கிட்ட கேள்வி கேட்டுருந்தா இவ்வளவு காலமா நாம ஏமாத்தி பொழக்க முடியுமான்னு சொல்லி தொப்பை குலுங்க சிரிச்சாரு.கொஞ்ச நாள் போகட்டும் இந்த சிலையையும் திருடி வித்துறலாம்னு ரெண்டு பெரும் பேசிக்கிட்டாங்க.
ஹரஹர மஹாதேவகி

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...