Tuesday 7 August 2018

பெரியாரெனும் ஓர் ஆகச் சிறந்த ஆட்டக்காரர்

பெரியாரெனும் ஓர் ஆகச் சிறந்த ஆட்டக்காரர்
------------------------------------------------------------------------
பெரியாரின் ஆடுகளம் தூரத்தால் குறிக்கப்படுவது அல்ல, அது காலத்தால் குறிக்கப்பட வேண்டியது. அவர் எப்போதும் எதிர்ப்பு ஆட்டமே (Offence) ஆடியிருக்கிறார் தடுப்பாட்டத்தில் (Defence) அவருக்கு விருப்பமில்லை. ஆனால் ஒரு போதும் அவர் முரட்டு ஆட்டம் ஆடியது இல்லை.
பிரேசில் வீரர் நெய்மரைப்போல் அழுது நடிக்கும் அழுகுணி ஆட்டமும் ஆடியது இல்லை, அர்ஜென்டினா வீரர் மரடோனாவைப்போல் கையால் கோல் அடித்துவிட்டு அது கடவுளின் கை (Hand of God) என்று பொய் சொல்லி ஏமாற்றியதைப் போன்ற புளுகுணி ஆட்டமும் ஆடியதில்லை. துடிதுடிப்போடும் சுறுசுறுப்போடும் களத்தில் பம்பரமாய் சுழன்று ஆடியிருக்கிறார் தன் வாழ்நாள் முழுவதும்.
எதிராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பந்துகளை எல்லாம் நேர்த்தியாக திருப்பி தடைகளை தகர்த்து வெற்றிக் கோல்களாக்கி வெற்றிக்கோப்பையை பார்வையாளர்களாகிய பொதுமக்களுக்கே பெற்றுத் தந்திருக்கிறார் பெரியார், இதோ கோல் அடிக்கிறேன் முடிந்தால் தடுத்துப் பார் என்று சொல்லிச் சொல்லியே அடித்திருக்கிறார் கில்லி மாதிரி.
சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வீரர்கள் ஆடுகளத்திலிருந்து வெளியேற்றப்படுவது போல், பெரியாரும் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவ்வப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், அது அவர் செய்த தவறுகளுக்காக அல்ல அவரது ஆட்டைத்தை கண்டு கலக்கமடைந்த எதிராளிகளுக்கு ஏற்பட்ட பயத்தினால்.
வெற்றிக்குரிய கோலை அடிக்கும் வீரராக அவர் இருந்தபோதும் களத்தில் குழுவாக இணைந்து ஒற்றுமையுடனே ஆடி இருக்கிறார், ஆம் அவரின் எல்லாப் போராட்டங்களிலும் பொதுமக்களின் பங்களிப்பும் சேர்ந்தே இருந்திருக்கிறது.
அன்று மட்டுமல்ல இன்றும் அவரே ஆகச் சிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் மக்களிடத்தில். ஏனெனில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் களத்தில் ஆடிய ஆட்டம் அப்படி.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...