Monday 6 August 2018

ரஜினி - கடவுளின் அல்லக்கை

உழைப்பால்,முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது,ஆண்டவன் அருள் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் – ரஜினிகாந்த்
--------------------------------------------------------------------------------------
ரஜினி - கடவுளின் அல்லக்கை
------------------------------------------------
தன்னைவிட அதிக திறமையும் முயற்சியும் உழைப்பும் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கும்போது, சொல்லிக்கொள்ளும்படி எந்தவித திறமையும் கடின உழைப்பும் இல்லாத தான் இந்த சமூகத்தில் பேருடனும் புகழுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன? வெற்று மாயக் கவர்ச்சியை மூலதனமாக்கி ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று, அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சுரண்டிக்கொழுத்து, மாபெரும் செல்வந்தனாக தான் இருப்பதற்கு காரணம் என்ன? இந்த விடை தெரியாத கேள்விகளுக்கு ரஜினி கண்டுபிடித்த விடைதான் கடவுள்,கடவுள் அருள்.
அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியும் திறமையும் இல்லாத ஒருவர் அந்த நிறுவனத்தின் முதலாளியிடமிருந்து, திறமை வாய்ந்த மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பளம் வாங்கும்போது, தனது முதலாளியிடம் எவ்வளவு நன்றியும் விசுவாசமும் வைத்திருப்பாரோ, அதைப்போன்றதே ரஜினி தன்னுடைய முதலாளியாக நினைக்கின்ற கடவுளின் மேல் வைத்திருக்கும் பக்தியும், அதுமட்டுமல்லாமல் எங்கே தனது முதலாளி எல்லாவற்றையும் பறித்துக்கொள்வாரோ தடுத்துவிடுவாரோ என்ற பயமும்தான் அவரது அளவற்ற கடவுள் பக்திக்கு காரணம்.
ரஜினி சொல்லவருவது என்னவென்றால் யாரெல்லாம் சதாசர்வகாலமும் கடவுளுக்கு அல்லக்கைகளாக இருந்து சொம்படிக்கிறார்களோ அவர்களுக்கே அவர் அருள்புரிந்து வெற்றிபெறச் செய்வார் என்பதே. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இப்படிப்பட்ட கடவுள் மட்டும் கேடுகெட்டவர் அல்ல, இதை வெட்கமின்றி சொல்லித்திரியும் ரஜினியைப் போன்றவர்களும் கேடுகேட்டவர்களே.
க.ம.மணிவண்ணன்
13/07/2018

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...