Monday 6 August 2018

மதுரையை எரித்த கண்ணகிக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,

மதுரையை எரித்த கண்ணகிக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
எனக்கு இலக்கண இலக்கியம் சிலப்பதிகாரமெல்லாம் தெரியாது, ஒங்கள சினிமாலதான் பாத்துருக்கேன். ஒங்ககிட்ட சில விசயங்கள சொல்லனும்னு தோணிச்சு அதுனாலதான் இந்த கடுதாசிய எழுதுறேன்.
1) உங்களுக்கு நடந்தது குழந்தை திருமணம்,உங்களுக்கு 12 வயசு கோவலனுக்கு 16 வயசு அதாவது good touch, bad touch னா என்னன்னு தெரியாத வயசுல ஒங்களுக்கு கல்யாணம் நடந்திருக்கு,நீங்க இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லி அழுது அடம்புடிச்சு கல்யாணத்த நிப்பாட்டாம இந்த தப்புக்கு நீங்களும் தொண போயிருக்கீங்க.
2) அந்த சின்ன வயசுலேயே உங்க வீட்டுக்காரரு மாசறு பொன்னே வலம்புரி முத்தேன்னு பாடும்போது இது child abusing னு சொல்லி கண்டிக்காம நீங்களும் சந்தோசமா சிரிச்சு ரசிச்சுக்கிட்டு இருந்திருக்கீங்க.
3) கோவலனோட character என்னன்னு ஒங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்,அப்படி தெரிஞ்சிருந்தும் நானும் ஒங்க கூட வர்றேன் அத்தான்னு சொல்லாம அவன மட்டும் வெளியூருக்கு அனுப்பி வச்சிருக்கீங்க business பண்றதுக்கு.
4) போனவன ரெம்ப நாளா காணாம்னதும் பெத்தவங்ககிட்ட சொல்லி தேடச்சொல்லியிருக்கணும்.நீங்க ரொம்ப வசதியான குடும்பம் அதுனால அரசர்கிட்ட சொல்லி ஒற்றர்கள அனுப்பி அவன கண்டுபிடிச்சு கூட்டிக்கிட்டு வரச்சொல்லியிருக்கலாம் ஆனா நீங்க அத செய்யாம இருந்திருக்கீங்க.
5) காசு பணத்தையெல்லாம் அழிச்சிட்டு மாதவி மேல சந்தேகப்பட்டு சண்டைபோட்டுட்டு வீட்டுக்கு வந்தவன நீ எதுக்கு இங்க வந்தேன்னு சொல்லி வெரட்டிவிடாம அவன சேத்துக்கிட்டீங்க இது நீங்க செஞ்ச உலக மகா தப்பு.
6) ஏற்கனவே ஒரு தடவ உங்கள விட்டுட்டு போனவன்னு தெரிஞ்சும் அவன் கூடப்போகாம business னா என்னன்னே தெரியாத அவன்கிட்ட ஒங்க சிலம்பக் கொடுத்து வித்திட்டு வரச்சொல்லியிருக்கீங்க.
7) பாண்டிய நெடுஞ்செழியன் கோபத்துல கொண்டுவா கள்வனைன்னு சொல்றதுக்குப் பதிலா கொன்றுவா கள்வனைன்னு சொன்னதும் கோவலனை கொன்னுட்டாங்க, நீங்களும் கோவத்தோட போயி தேரா மன்னான்னு பாண்டியன்கிட்ட வாக்குவாதம் பண்ணி உண்மைய நிரூபிச்சதும் அவனும் நாம தப்பு பண்ணிட்டோமேன்னு feel பண்ணி செத்துப்போயிட்டான்.
8) இதோட நீங்க விட்டுருக்கணும் ஆனா என்ன பண்ணீங்க உங்க சொந்தப் பிரச்சனைக்காக பொது சொத்துக்களையும் பொதுமக்களையும் தீயில எரிய விட்டுருக்கீங்க அது மட்டுமா பாப்பானுகள ஒன்னும் செய்யக்கூடாதுன்னு தீக்கிட்ட சொல்லி இருக்கீங்க. ஒழைக்காம தின்னு கொழுக்குற பாப்பானுகளுக்கு ஒன்னும் ஆகக் கூடாது, அன்னாடம் ஒழச்சுப் பொழைக்குற எங்க பாட்டனும் பாட்டியும் நெருப்புல வெந்து சாகணும்னு நெனச்சிருக்கீங்க இது எவ்வளவு பெரிய அநியாயம்.
9) நீங்க ஒழுங்கா check பண்ணியிருந்தா ஒங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சிருக்கும், அந்த சிலம்பயே பாப்பானுகதான் திருடியிருப்பானுக, இவ்வளவு technology, cctv இருக்குறப்பவே கோவில் சிலைய திருடி இருக்குறானுக, கருவறைக்குள்ளேயே அசிங்கம் பண்றானுக, தப்பு பண்ணிட்டு தலைமறைவா திரியிறானுக அப்ப அந்த காலத்துல என்னென்ன பண்ணியிருப்பானுக, நீங்க என்னடான்னா அவனுகள காப்பாத்தியிருக்கீங்க.
இப்பவாவது தெரிஞ்சுக்குங்க நீங்க எவ்வளவு பெரிய தப்புகள பண்ணியிருக்கீங்கன்னு.
இப்படிக்கு,
தீயில் எரிந்து சாம்பலான பாட்டன் பாட்டிகளின் பேரன்
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...