Tuesday 1 January 2019

புயல் கற்றுத்தந்த பாடம்

புயல் கற்றுத்தந்த பாடம்
---------------------------------------
கடந்து போன கஜா புயல் பெரிய பாதிப்புகளையும் சில பாடங்களையும் தந்துவிட்டுப் போயிருக்கிறது.
புயல் கடலோர மாவட்டங்களை மட்டுமே தாக்கும் என்கிற பொதுக்கருத்தை உடைத்துவிட்டுச் சென்றிருக்கிறது, கடலோடு எந்தவித தொடர்பும் இல்லாத திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களும் புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறது புயலால். எனவே இனிமேல் எந்த இயற்கை சீற்றமென்றாலும் எல்லோரும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக அதிக மனித உயிர் பலியாவதை வேண்டுமானால் தடுக்கலாம் ஆனால் முற்றிலுமாக தடுக்க முடியாது என்பதையும், கால்நடைகளையும் விவசாயப் பயிர்களையும் மரங்களையும் உடைமைகளையும் காப்பது கடினம் என்பதையும், ஆகப் பெரியவன் இயற்கைதான் என்பதையும் மீண்டும் ஒருமுறை அடித்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
திட்டமிட்டுச் செயல்படுகின்ற நிர்வாகத்திறன் கொண்ட அரசால் மட்டுமே இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கியத் தேவைகளான உணவு, உடை, குடிநீர், மின்சாரம் மற்றும் நிவாரணங்களை உடனடியாகத் தந்து பாதிப்பிலிருந்து விரைவாக மீட்டெடுக்க முடியும் என்பதையும் உறுதியாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டது பெருநகரமா, கிராமமா, பாதிக்கப்பட்ட மக்கள் யார் என்பதைப் பொருத்தே மற்றவர்களால் கவனிக்கப்படுகிறது என்பதையும், மீனவர்களின் அழுகுரலுக்குப் போலவே விவசாயிகளின் அழுகுரலுக்கும், உழைக்கும் ஏழை மக்களின் அழுகுரலுக்கும் இங்கு மதிப்பு இல்லை என்பதையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
மனிதகுலம் இந்த மண்ணில் இன்னும் உயிர்ப்புடன் வாழ்வதற்கு மனிதநேயம் மட்டுமே காரணம் என்பதையும், மதநேயம் ஒரு மயிரையும் புடுங்காது என்பதையும் ஓங்கி அடித்து உரக்கச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
க.ம.மணிவண்ணன்
23/11/2018

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...