Tuesday 1 January 2019

பெண்ணுரிமைப் போராளி பெரியார்

பெண்ணுரிமைப் போராளி பெரியார்
--------------------------------------------------------
ஆணும் பெண்ணும் சமம் ஆண்களுக்குள்ள உரிமைகள் பெண்களுக்கு வேண்டும் என்கிறார் பெரியார். பெண் கல்வியை வலியுறுத்தினார் பெரியார். உயர் கல்வி கற்ற பெற்ற பெண்களின் மொத்த விழுக்காட்டில் தமிழகமே முதல் இடத்தில் உள்ளது. பெரியார் விதைத்த சிந்தனை விதை இன்று மாபெரும் ஆலமரமாகி நிற்கிறது.பெண்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சொத்திலும் ஆண்களுக்கு நிகரான சம உரிமை வேண்டுமென்றார் பெரியார்.கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தார் பெரியார். அதை தன் இல்லத்திலேயே நிகழ்த்திக்காட்டினார்.மதத்தின் பெயராலும் சடங்கு சம்பிரதாயங்களின் பெயராலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதையும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் கண்டு கோபம் கொண்டு போராடினார் பெரியார்.அவர் பெண் குலத்திற்கு செய்த நன்மைகளை பாராட்டியே பெண்கள் அவருக்கு பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத்து சிறப்பித்தனர்.அதுவரை ஈ.வெ.ராமசாமியாக இருந்தவர் பெண்களால் தான் பெரியார் என்றானார்.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...