Monday 18 June 2018

ஆஸ்திரேலியாக் கப்பலில் வடை சுட்ட கதை - சீமான் கதைகள்

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு கப்பல் 40000 மெட்ரிக் டன் அரிசியுடன் வந்தது, அது நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த கப்பலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த நேரத்தில் எங்களுக்கு மிகவும் பசியாக இருந்தது, அண்ணன் என்னைப் பார்த்துக் கேட்டார் உனக்கு உளுந்த வடை சுடத் தெரியுமா என்று, நான் சொன்னேன் எனக்கு வாயால் வடை சுட மட்டும் தான் தெரியும் உளுந்த வடை சுடத்தெரியாது என்று. எத்தனை காலம் தான் வாயாலே வடை சுட்டுக் கொண்டிருப்பாய் உளுந்த வடை சுடவும் கற்றுக்கொள் என்றார்.
நானும் கப்பலில் உளுந்தம் பருப்பு இருக்கிறதா என்று தேடினேன் நல்ல வேலையாக கப்பலில் உள்ள சமையல் அறையில் உளுந்தம் பருப்பு இருந்தது அதை நன்கு அரைத்து எண்ணெயில் பொரித்து மொறுமொறுப்பான வடையை அண்ணனிடம் கொடுத்தேன் அவர் அதை நன்கு ரசித்து உண்டார். எப்போதும் வாயில் மட்டுமே வடை சுடும் நான் ஆஸ்திரேலியா கப்பலில் தான் முதன்முதலில் உளுந்த வடை சுடக் கற்றுக்கொண்டேன்.
என்னிடம் இதுபோன்ற பல கதைகள் இருக்கிறது அவற்றை நான் அவ்வப்போது உங்களுக்குச் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன்னால் நான் சொன்ன ஆமைக்கதையை நீங்கள் மிகவும் ரசித்தீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அனைவருக்கும் நன்றி ஒறவுகளே

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...