Saturday 2 June 2018

கால் மேல கால் போட்டா என்ன தப்பு ? - பெரியார்

கால் மேல கால் போட்டா என்ன தப்பு ? - பெரியார்
ஒருமுறை ஒரு பொது மேடையில் பெரியாரும் வேறு சிலரும் அமர்ந்திருக்கின்றார்கள். அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு நபர் மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டிருந்தார். மேடையில் அமர்ந்திருந்த ஒருவர், பெரியாரிடம், ' அந்த நபரைப் பாருங்கள்! திமிர் பிடித்தவர் . பெரியவர்கள் மேடையில் அமர்ந்திருக்கும் போது, மரியாதை தெரியாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாள் ! என்றார் .
அதற்குப் பெரியார் , அவர் காலின் மீது தானே அவரது காலைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அதில், உமது மரியாதை எங்கே குறைந்து போயிற்று ? என்றார் .
'ஒருத்தர் அவரோட காலை அவரோட கால் மேல போடுவதில் என்ன தப்பு. அவர் காலை என் மேல போட்டாத்தான் தப்பு’ என்றார் பெரியார்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...