Monday 18 June 2018

நீட் சோகங்கள்

மீண்டும் ஒரு அனிதா
செஞ்சியை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண்களும், +2 தேர்வில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர். சென்ற ஆண்டு நடைபெற்ற நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த போதும் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இயலவில்லை, அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற முனைப்பில் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி உள்ளார் ஆனால் அவரால் தேர்ச்சி பெற இயலவில்லை அதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------

கல்வியில் மிகவும் பின்தங்கிய வடமாநிலங்களில் இருந்து எப்படி அதிக விழுக்காடு மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள்.ஏதாவது முறைகேடு இருக்குமா.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நீட் தேர்வில் தேசிய அளவில் 12 ஆவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்த மாணவி கீர்த்தனா சொல்கிறார் " என் தந்தையும் தாயும் மருத்துவர்கள், நான் 11 ஆம் வகுப்பிலிருந்தே தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தேன்"
அப்படியானால் இனி மருத்துவர்களின் பிள்ளைகள்தான் மருத்துவராக முடியுமா, செருப்பு தைப்பவரின் பிள்ளை செருப்புத்தான் தைக்க வேண்டுமா.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...