Saturday 2 June 2018

ஒரு யானை பாகனைக் கொன்ற கதை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீது ஒருவர் செருப்பு வீசியதால் தான் சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்து பாகனை கொன்று விட்டது - மன்னார்குடி ஜீயர்
கீழே உள்ள கதையை நடிகர் வடிவேல் மாடுலேஷனில் படிக்கவும். இது ஒரு உண்மைக் கதை (கதை வசனம் - மன்னார்குடி ஜீயர்)
ஒரு நாளு, ஒருத்தரு ஸ்ரீரங்கம் கோவில் கருவறையில படுத்துக்கிடந்த ரங்கநாதர் மேல செருப்ப வீசிட்டாரு, படுத்துக்கிடந்த ரங்கநாதரு எந்திருச்சு வந்து யாருடா எம்மேல செருப்ப எறிஞ்சதுன்னு கேக்குறதுக்குள்ள செருப்ப எறிஞ்சவரு கோவில விட்டு வெளில போயிட்டாரு, ரங்கநாதருக்கு துக்கம் தாங்கல உடனே சமயபுரத்துல இருக்க அவரு தங்கச்சி மாரியம்மாகிட்ட நடந்தத போன்ல சொல்லி ஓன்னு கதறி அழுதுருக்காரு, அதுக்கு அவரு தங்கச்சி ஏன்னே உம்மேல செருப்ப எரிஞ்சவன நீ சும்மாவா விட்ட அப்படின்னு கேட்டுருக்கு, அதுக்கு ரங்கநாதரு நா நல்லா சாப்புட்டுட்டு கால நீட்டி கைய தலைக்கு முட்டுக்குடுத்துக்கிட்டு மொரட்டுத்தனமா தூங்கிக்கிட்டு இருந்தேன் அந்த நேரமா பார்த்து படுபாவி என் மூஞ்சில செருப்ப எறிஞ்சுட்டுப் போயிட்டான்னு சொல்லி கண்ணீர் விட்டுருக்காரு, இதக்கேட்ட மாரியம்மாவுக்கு மனசு தாங்கல, அழுதுகிட்டே பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த கோவில் யானைகிட்ட சொல்லியிருக்கு, இதக் கேட்டதும் யானைக்கு கோவம் வந்திருச்சு நம்ம அம்மாவோட அண்ண மேல யாரோ செருப்ப எறிஞ்சிட்டாங்களேன்னு,உடனே அது கோவத்துல பக்கத்துல அப்பாவியா நின்னுக்கிட்டு இருந்த யானைப் பாகன கீழ தூக்கிப்போட்டு மிதிச்சு கொன்னுருச்சு.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...