Monday 18 June 2018

அமெரிக்கன் எம்பசில வணக்கம் வச்ச கதை - சீமான் கதைகள்

அன்பான ஒறவுகளே கொஞ்ச நாளைக்கு முன்னால நா சொன்ன கப்பல் கதைய கேட்டீங்க, இப்ப அமெரிக்கன் எம்பசில வணக்கம் வச்ச கதைய சொல்லப்போறேன்.மொத மொதலா என்னய அமெரிக்காவுக்கு கூப்புட்டாங்க, அதுனால விசா வாங்குறதுக்காக எம்பசிக்கு போனேன் அங்க ஒரு வெள்ளக்காரம்மா உக்காந்து இருந்துச்சு அதுக்கிட்ட கடவுச்சீட்ட கொடுத்துட்டு வணக்கம்னு சொன்னேன் அது என்னய நிமிர்ந்து பாத்துட்டு ஹேப்பி ஜேனின்னு சொல்லிட்டு கடவுச்சீட்ட வாங்கி வச்சிக்கிருச்சு.
அந்தம்மா என்னய பத்தி வெளில விசாரிச்சிருக்கும் இல்லனா நான் பேசுற வீடியோவ யூடியுப்ல பாத்திருக்கும்னு நெனைக்கிறேன், இவன் சும்மாவே கொட்டுற மழையில 5 மணி நேரம் மூச்சுவிடாம நரம்பு பொடைக்க பேசுவான் நாம ஏதாவது இங்கிலீஷ்ல கேக்கப்போக அது புரியாம இவன் கைய தூக்கிகிட்டு பேச ஆரம்பிச்சான்னா நம்ம காதுல ரத்தம் வந்துரும்னு பயந்துகிட்டு கடவுச்சீட்ட வாங்கி வச்சிக்கிருச்சுன்னு நெனைக்கிறேன், அது மட்டுமில்லாம அமெரிக்காவுல இவன விட பெரிய தில்லாலங்கடி ஒருத்தன் இருக்கான் அதுனால அங்க பொழப்பு நடத்த முடியாது, அங்க உள்ளவனுக எல்லாம் இங்கிலிஷ்ல புளுகுனாதான் நம்புவானுக இங்க உள்ள எளிய தமிழ் புள்ளைகளும் தம்பிகளும் தான் இவன் பேசுற பொய்ய நம்பி கைதட்டி விசிலடிச்சு சில்லறய செதற விடுவானுக அதுனால கண்டிப்பா இவன் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்திருவான்னு அந்த வெள்ளக்காரம்மா நம்பிருச்சு.
அப்புறம் அங்க நின்னுக்கிட்டு இருந்த தமிழ் ஆளுங்க எல்லாம் ஏதோ குசுகுசுன்னு பேசிக்கிட்டானுக இவ்வளவு நாளா நம்மள கொலையா கொன்னான் கொஞ்ச நாளைக்கு நாம நிம்மதியா இருக்கலாம் அமெரிக்காவுல இருக்குறவனுக இவன் பேசுறத கேட்டு சாகட்டும்னு பேசிக்கிட்டு இருந்துருப்பானுகன்னு நெனைக்கிறேன்.
இது தான் ஒறவுகளே அமெரிக்கன் எம்பசில நா வணக்கம் வச்ச கதை.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...