Monday 18 June 2018

நீட் - அக்காவும் இரு தங்கைகளும்

கண்களே
கண்ணீரைச் சேமித்தே வைத்திருங்கள்
அனிதா பிரதீபாவோடு
முடிந்துவிடப்போவதில்லை போலிருக்கிறது
நீங்கள் சிந்தும் கண்ணீர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
நீட்
அனிதா
பிரதீபா
சுபஸ்ரீ
-----------------------------------------------------------------------------------------------------------
அக்காவும் இரு தங்கைகளும்
----------------------------------------------
அக்கா
நாங்கள் உன் தங்கைகள்
நீங்கள் என் தங்கைககளா !?
ஆமாம்
நீ எங்கள் அக்கா
நாங்கள் உன் தங்கைகள்
எதற்காக இங்கு வந்தீர் ?
நீ எதற்காக எப்படி இங்கு வந்தாயோ
அதற்காக அப்படியே நாங்களும் வந்தோம்
சொன்னால் புரியாதென்று
சொல்லாமல் சொல்லிவிட்டு வந்தேனே
நானே கடைசியாக இருக்கட்டுமென்று
மாறவே இல்லையா இன்னும் ?
மாறவில்லை
மாற்றவில்லை எதையும்
சமூகநீதி கொன்ற கொலைகாரர்கள்
மக்கள் ?
சிலநாட்கள் போராடினார்கள் நீ சென்ற பிறகு
வசதி படைத்தவர்களுக்கு
போராட்டம் தேவையற்றதாகிவிட்டது
வசதியற்றவர்களுக்கு
வாழ்வதே போராட்டமாகிவிட்டது
அழாதே அக்கா
நாங்களும்
சொல்லாமல் சொல்லிவிட்டே வந்திருக்கிறோம்
நாங்களே கடைசியாக இருக்கட்டுமென்று

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...