Saturday 2 June 2018

மானம் கெட்ட தமிழனே என்றழைக்கும் நன்றி கெட்ட தமிழனே

நன்றாகக் கேள் எதற்காக பெரியார் சிலையென்று, கல்வி மறுக்கப்பட்ட நாங்கள் இன்று கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்பதற்கு காரணம் இட ஒதுக்கீடு, அதை பெற்றுத்தந்தது பெரியாரின் இடைவிடாத போராட்டம். அந்த நன்றியை மறந்த தமிழர்கள் இல்லை நாங்கள், ஏ நன்றி கெட்ட தமிழனே நீ கேள் எதற்காக பெரியார் சிலையென்று.
அவரவர் சாதித் தொழிலையே பள்ளிகளில் கற்க வேண்டுமென குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டுவந்த போது, மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் செய்தவர் பெரியார் அதனாலேயே குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அவரவர் சாதித் தொழிலையே அனைவரும் செய்ய வேண்டியதிருந்திருக்கும் மருத்துவராகவோ பொறியாளராகவோ உயரயதிகாரியாகவோ வாய்ப்பு இருந்திருக்காது. பெரியாரின் உழைப்பை மறந்த தமிழர்கள் இல்லை நாங்கள், ஏ நன்றி கெட்ட தமிழனே நீ கேள் எதற்காக பெரியார் சிலையென்று.
அனைவரும் கோவிலுக்குள் செல்வதற்காகவும் அர்சகராக ஆவதற்கும் போராடியவர் பெரியார், எங்கள் சுயமரியாதைக்காகவும், இழிவு நீங்கவும், தீண்டாமை நீங்கவும், சாதி மதம் ஒழியவும் தன் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் பெரியார், அந்த பெரும் பணியை மறந்த சிறியார்கள் இல்லை நாங்கள், ஏ நன்றி கெட்ட தமிழனே நீ கேள் எதற்காக பெரியார் சிலையென்று.
நால்வர்ணத்தைக் கடைபிடித்த, சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மனுநீதியின்படி ஆட்சி செய்த பார்பன அடிமைத் தமிழ் அரசர்கள் திருக்குறளை வள்ளுவரைப் போற்றவில்லை, திருக்குறள் மாநாடு நடத்தி தமிழ்நாடெங்கும் திருக்குறளைக் கொண்டாட வைத்தவர் பெரியார். அந்த பெரியாரை மறந்த தமிழர்கள் இல்லை நாங்கள். ஏ நன்றி கெட்ட தமிழனே நீ கேள் எதற்காக பெரியார் சிலையென்று.
க.ம.மணிவண்ணன்
17/05/18

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...