Saturday 7 October 2017

சுதந்திர தினம்

பள்ளி வேலைநாளில் வராமல்
சனிக்கிழமையில் வந்ததற்காக
சுதந்திரதினத்தின் மீது
கோபத்திலிருக்கிறாள் என் மகள்

இந்தியா வல்லரசு ஆகிவிட்டால்
எல்லோருக்கும் கிடைத்துவிடுமா
மூன்று வேளை சாப்பாடு

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது
நாளைக்கு வாழ்த்துச் சொல்பவர்களிடம்
நான் இந்தியன் இல்லை என்று

சுதந்திரதினத்தைப் பற்றி
யோசிக்கும் போதெல்லாம்
ஆரஞ்சு மிட்டாயை தாண்டி
எதுவுமே வருவதில்லை

வழக்கம்போலவே
நாளையும் கொடியேற்றுவார்கள்
அணிவகுப்பு நடக்கும்
குண்டு துளைக்காத மேடையில் நின்று
பாதுகாவலர்கள் சுற்றி நிற்க 
சுதந்திரம் பற்றி உரக்கப்பேசுவர்

அந்த நேரத்தில்
நடிகனோ நடிகையோ
சுதந்திரதின வாழ்த்துச் சொல்வதை
தொலைக்காட்சியில் பார்த்து
ரசித்துகொண்டிருப்பான் சாமானியன்

அவனுக்கு மட்டும்தான் தெரியும்
இந்த இரண்டுமே
பொழுதுபோக்கு நிகழ்ச்சியென்பது

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...