Monday 9 October 2017

அப்பா

அப்பாவைப் பற்றிய நினைவுகளிலிருந்து
அவரிடம் வாங்கிய அடிகளை
அழித்து விட முடிவதில்லை
மகன்களால்.

மனைவியை மகாராணியாய்
நடத்தாவிட்டாலும்
மகள்களை
இளவரசிகளாகத்தான் கொண்டாடுகின்றனர்
எல்லோரும்.

எப்படியும் ஒத்துப்போய்விடுகிறது
அப்பாக்களுக்கு
தங்கள் மகள்களிடம் மட்டும்.

சொல்வதற்கு நிறைய இருந்தும்
சொல்லாமலே போய் விடுகிறது
அப்பாக்களுக்கு
தங்கள் மகன்களிடம்.

தோழமை உணர்வுடன் பழகும்
அப்பா மகனைப் பார்க்கும்போது
சற்று பொறமையாகத்தான் இருக்கிறது.

மகன்களுடன் 
பேசாமலே இருந்து விடுகிற
அப்பாக்களால்
மகள்களுடன்
அவ்வாறு முடிவதில்லை.

அப்பாக்களுடனான 
மகன்களின் தலைமுறை இடைவெளி
தங்கள்
தாத்தாக்களிடம் இருப்பதே இல்லை.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...