Saturday 7 October 2017

பேருந்து பயணம்

காலைநேரப் பயணத்தில்
ஆறு ரூபாய் பயணச்சீட்டிற்கு
நூறு ரூபாயை எடுத்து
யாராவது ஒருவர் நீட்டும்போது
கூடப் பயணிக்கும்
நமக்கே கோபம் வரும்போது
நடத்துனருக்கு வராதா என்ன

இறங்க வேண்டிய நிறுத்தத்தில் 
இறங்காமல் இருந்துவிட்டு
சற்று தூரம் நகர்ந்ததுமே
நிறுத்தச் சொல்லி கத்துகிறார்
யாராவது ஒருவர்
தினந்தோறும் பேருந்துகளில்

கூட்டம் இல்லாப் பேருந்தில்
சன்னல் ஓர இருக்கை பார்த்து
அமர்ந்திருக்கும் வேளையிலே
குடும்பத்தோடு ஏறுபவர்
இடம் மாறி அமருமாறு
நம்மைப் பார்த்து சொல்லும்போது
சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது

முகூர்த்தநாள் என்றாலே
பயமாகத்தான் இருக்கிறது
பிதுங்கி வழியும் பேருந்தில்
பயணிக்க வேண்டுமேயென்று

பேருந்தின் உள்ளே
அவ்வளவு இடமிருந்தும்
படியிலேயே நிற்கிறார்களே
ஒருவேளை 
வாட்ச்மேனாக இருப்பார்களோ

அனைத்து இருக்கைகளிலும்
ஓரிரு ஆண்களே அமர்ந்திருக்க
பெண்கள் மட்டும் ஏனோ
நின்று கொண்டே பயணிக்கிறார்கள்
பேருந்துகளில்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...