Saturday 7 October 2017

கவிதைகள்

ஒரு கவிதை சொல்லென்றாய்
உன்பெயர் சொன்னேன்
மரபுக்கவிதை போதும்
புதுக்கவிதையும் ஹைக்கூவும் சொல்லென்றாய்
நம் மகள் பெயரையும் 
மகன் பெயரையும் சொன்னேன்

நான் எனது கேள்விகளை முடிக்கும்முன்பே
பதில் சொல்லி முடித்துவிடுகிறாய் நீ
அது எப்படி
நான் கேட்கப்போகும் கேள்வியையும்
அதற்கான பதிலையும்
முன்கூட்டியே யோசிக்க
உன்னால் மட்டும் முடிகிறது

பொய் எனக்கு பிடிக்காதென
நான் சொன்னது
நீ சொல்லக்கூடாது என்பதற்கானது
நான் சொல்லமாட்டேன் என்பதற்கானதல்ல

பேருந்துகளில்
ஆணின் அருகிலிருக்கும்
காலி இருக்கையில் 
எளிதில் அமர்ந்துவிடமுடிகிறது பெண்ணால்
ஆனால் 
எந்த ஒரு ஆணாலும்
அவ்வாறு அமர்ந்துவிடமுடிவதில்லை
பெண்ணின் அருகில்
அவளின் அனுமதியின்றி

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...