Saturday 7 October 2017

சாப்பாடு

அப்படி ஒன்றும்
எளிதானதாக
இருப்பதில்லை
குழந்தைகளுக்கு
உணவு ஊட்டுவது

எப்படியாவது
கற்றுக்கொள்ள வேண்டும்
என் மகளிடமிருந்து,
உணவை வீணாக்காமல்
எப்படிச்
சாப்பிட வேண்டுமென்பதை.

நன்றாக இருக்கிறது என்பதைச்
சொல்லத் தயங்கும் வாய்
சாப்பாடு சரியில்லை என
சட்டென்று சொல்லிவிடுகிறது.

வருத்தமாகத்தான்
இருக்கிறது
பார்த்துப்பார்த்து
சமைக்கப்படும் சாப்பாடு
ஏனோதானோவென
சப்பிடப்படும்போது

உணவற்ற வறியோரைப்
பார்க்கும்போது
கலங்கும் மனது
உணவை வீணாக்கும்போது
அதை மறந்துவிடுகிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...