Saturday 7 October 2017

கேள்விகள்

பயந்து ஓடுகிறேன்
கேள்விகளைக் கண்டு

கேட்கப்படப்போகும்
கேள்விகள் பற்றிய 
அச்சத்துடனேயே செல்கிறேன்
எங்கு சென்றாலும்,
நன்கு படிக்காத மாணவனைப் போலவே.

கேள்விகள்,
அவமானப்படுத்துகின்றன
முட்டாளாக்குகின்றன
எரிச்சலூட்டி
கோபம் கொள்ள வைக்கின்றன.

கேட்க வேண்டுமென்பதற்காகவே
கேட்கப்படுகின்றன கேள்விகள்,
விடை தெரியாமல்
திணறி நிற்கையில்
தீர்வு ஏதும் சொல்லாமல்
மௌனமாகப் புன்னகைத்துவிட்டோ
சத்தமாகச் சிரித்து விட்டோ
சட்டென்று நகர்ந்து விடுகின்றன.

கேள்விகளே இல்லாத
இடமாய்ப் பார்த்து
தனித்திருக்கையில்
என்னிடம் கேட்கப்படும்
எனது கேள்விகள்
கவலை கொள்ள வைக்கின்றன


க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...