Saturday 7 October 2017

இடஒதுக்கீடு உனக்கெதற்கு

இடஒதுக்கீடு உனக்கெதற்கு

மறுபடியும் மனிதஉயிர்களை
காவு வாங்கிவிட்டது
குஜராத்
அன்று மதத்தின் பெயரால்
இன்று சாதியின் பெயரால்

இடஒதுக்கீடே கூடாதென
போராடியவர்கள்தானே நீங்கள்
இப்போது மட்டுமென்ன
இடஒதுக்கீடு வேண்டிப் போராட்டம்

உயர்பதவிகளிலும் செல்வந்தர்களாகவும்
இருப்பவர்கள் நீங்கள்
உங்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு கிடைத்துமென்ன
உயர்ந்தாவிட்டோம் உங்களைவிட

நீயும் நானும் இந்துதான் என்கிறாய்
பிறகு ஏன் என்மீது உனக்கு வெறுப்பு

உண்மையைச் சொல்
எதற்காக இந்தப் போராட்டம்
இடஒதுக்கீட்டையே ஒழிக்கவேண்டும்
என்பதற்காகத்தானே

உங்களுக்குக் கிடைக்கும்
வாய்ப்புகளும் வசதிகளும்
எங்களுக்கும் கிடைத்துவிட்டால்
ஒழித்துவிடலாம் இடஒதுக்கீட்டை

இருபத்திஇரண்டு வயது
இளைஞனின் பின்னால்
ஒரு சாதிக்கூட்டம்
இந்தியா வல்லரசு ஆகுமா
சுடுகாடு ஆகுமா

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...