Saturday 7 October 2017

வேண்டாம் நமக்கு மது

வேண்டாம் நமக்கு மது

கொண்டவளை அழவைக்கும்
குடும்பத்தைச் சீரழிக்கும்

மானத்தை வாங்கிவிடும்
மரியாதையைக் கெடுத்துவிடும்

குற்றங்கள் புரியவைக்கும்
கூனிக்குறுகி நிற்கவைக்கும்

ஆறறிவு மனிதனையும்
மிருகமாக மாற்றிவிடும்

சிந்தனையை மழுங்கடிக்கும்
செயல்பாட்டை ஒடுக்கிவிடும்

சுற்றம்சூழ் நட்பினையும்
முகம் சுழிக்க வைத்துவிடும்

உடல்நலத்தைக் கெடுத்துவிடும்
வாழ்நாளைக் குறைத்துவிடும்

அருந்துபவர்கள் சுரர்கள்
நாம் அசுரர்கள்
வேண்டாம் நமக்கு மது

மதி இருந்தால்
மதுவை விடு
முடியாதென்றால்
மரித்து விடு

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...