Monday 9 October 2017

வெயில்

இயற்கைக்கு 
தீங்கு செய்தால்
அது மனிதனை அழிக்கும் என்பதை
மறுபடியும் நிரூபித்துவிட்டது
இயற்கை.

ஸ்கூலுக்கெல்லாம் 
லீவு விடுற மாதிரி
ஆபீசுக்கும் லீவு விடுங்கப்பா
வெயில் கொடுமை 
தாங்கமுடியல.

2000 பேரைச் 
சுட்டெரித்துக் கொன்றுவிட்டு
வெறியோடு அலைகிறது
வெயில்.

அடித்த வெயிலின்மேல்
ஆத்திரம் கொண்டு
முகத்தில் அடித்தது போல்
அடித்து நொறுக்கியது
முந்தாநாள் இரவில் பெய்த மழை.

மரங்களை வெட்டுவாயா
வெட்டுவாயா என்று
சொல்லிச் சொல்லி
அடிப்பதைப்போல் இருக்கிறது
இந்த வெயில்.

ஒவ்வொரு ஆண்டும்
பெரும் போராட்டமாயிருக்கிறது
இந்த வெயிலோடு
போகும்போது 
திரும்ப வருவேன் என்று வேறு
சொல்லிவிட்டு போகிறது.

எவ்வளவு அடிச்சாலும் 
தாங்குறான்டா
இவன் ரொம்ப நல்லவன்டா
என்பதுபோல்
அடிக்கிறது இந்த வெயில்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...