Saturday 7 October 2017

தீபாவளி

தீபாவளி

அப்போது
தீபாவளியென்று ஒன்று இருந்தது 

நரகாசுரரை
கண்ணன் கொன்றானென்பதெல்லாம்
தெரியாது அப்போது

தெரிந்ததெல்லாம்
புத்தாடையும் பட்டாசும்தான்
பலகாரத்தின்மீதெல்லாம்
பெரிதாக ஒன்றும் ஆசை இருந்ததில்லை

ஒரு மாதத்திற்கு முன்பாகவே
தொடங்கிவிடும் தீபாவளி
அப்போது

பேச்சும் நினைப்புமெல்லாம்
புத்தாடை பட்டாசு பற்றியே
எப்போதுமிருக்கும்

எப்போது வரும் தீபாவளி
எப்போது உடுத்தலாம் புத்தாடையென
எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனது
புத்தாடை உடுத்தி எல்லோரிடமும் காட்டி
சந்தோசப்படும்

பட்டாசு வாங்கிவர
தினந்தோறும் சொல்வதுண்டு
அப்பாவிடம்

எங்கு வெடிச்சத்தம் கேட்டாலும்
ஓடிச்சென்று வேடிக்கை பார்ப்பதுண்டு
பட்டாசு வைக்க பயந்த காலமது
மத்தாப்பு கண்டால் குதூகலிக்கும்
புஸ்வாணம் கண்டால் புல்லரிக்கும்

இப்போதும்
தீபாவளியென்று ஒன்று இருக்கிறது
எல்லோரோடும் சேர்ந்திருக்கும்
விடுமுறையோடும்
அம்மா செய்துதரும் பலகாரத்தோடும்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...