Saturday 7 October 2017

அடிமைகள்

மூத்த அடிமைகளுக்கு
புதிய அடிமைகளைக்கண்டாலே
பயம் வந்துவிடுகிறது
எங்கே அடிமைத்தனத்தில் தம்மை விஞ்சி
முதலிடத்திற்கு வந்துவிடுவர்களோவென்று

அடிமையாக இருப்பது
பிடித்தே இருக்கிறது
அடிமைகளுக்கு

அடிமைகளுக்குள்ளேயே 
போட்டி வந்துவிடுகிறது பல நேரங்களில்
யார் மிகச்சிறந்த அடிமை என்பதில்

திறமைசாலிகளைவிட
அடிமைகளைத்தான் பிடித்திருக்கிறது
அதிகாரத்திலிருப்போர்க்கு

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...