Monday 9 October 2017

கவிதைகள்

ஆச்சரியமாகத்தானிருக்கிறது
சிரித்தமுகத்தோடு
அன்பாகவும்
மரியாதையாகவும்
பேசும்
நடத்துனர்களை
பேருந்துகளில் பார்க்கும்போது.

கேலியும்,கிண்டலும்
நம் எல்லோருக்குமே 
பிடித்திருக்கிறது,
நம்மை யாரும் செய்யாதவரை..

விஷேசத்திற்கு
போய்விட்டு வந்தததும்,
யாருமே, என்னை
வா என்று சொல்லவில்லை எனச்
சொல்வதையும்,
சாப்பாட்டில் என்ன குறையென்று
பேசுவதையும்,
வாடிக்கையாகவே வைத்திருக்கின்றன
வாய்கள்.

மரணம் நிகழ்ந்துவிட்ட
எந்த வீட்டிற்குப் போனாலும்,
சோகத்திற்குப் பதிலாக
எப்போது எடுப்பார்கள் என்ற
கேள்வி தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...