Saturday 7 October 2017

அந்த நாள் ஞாபகம்

சின்ன வயதிலேயே
எனக்கும் கேர்ள் பிரண்ட்ஸ் உண்டு
ஆயாவும் அப்பத்தாவும்

ஆயா இருந்தவரை
அடிக்கடி சொல்வதுண்டு
சின்னப்புள்ளயா இருக்கும்போது
பாலைக் குடித்துவிட்டு
பூனை குடித்ததாக 
பொய் சொல்வனென்று

என்னையும் 
வந்தேறி என்றிருப்பார்கள்
ஆந்திராவில்
சின்னஞ் சிறுவயதில்
திருப்பதி போனபோது
தொலைந்து போக இருந்த என்னை
கண்டுபிடிக்க இயலாமல் போயிருந்தால்

வாங்கியது
ஓரிருமுறைதான் என்றாலும்
நினைவிலேயே இருக்கிறது
அப்பாவிடம்
சிறுவயதில் வாங்கிய அடி

மீண்டும் வருமா
நண்பன் சேகருடனும்
அண்ணன் கௌதமனுடனும்
மிதிவண்டியில்
பள்ளிக்கு சென்ற நாட்கள்

மறக்கத்தான் முடியவில்லை
ரெஜினா டீச்சரையும்
பிரகாசி டீச்சரையும்
இராஜேஷ்வரி டீச்சரையும்
கோவிந்தம்மாள் டீச்சரையும்
அஞ்சாப்பு சாரையும்
பத்தாவது வார்டு 
பள்ளிகூடத்தையும்

நம்பத்தான் முடியவில்லை
என்னாலும்,
"அ" போடத் தெரியவில்லை
டீச்சர் அடிப்பார்கள் என
பள்ளி செல்ல அழுத என்னாலும்
பிறர் ரசிக்கும்படி
இப்படியெல்லாம் எழுத முடியுமென்பதை

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...