Saturday 7 October 2017

மழை

நின்றுவிடு மழையே

நீரின்றி அமையாது உலகு சரிதான்
எங்குமே நீராக இருந்தால் 
எப்படி அமையும் உலகு

இயற்கையே 
ஏனிந்தக் கோபம்
எதற்காக இந்த மழைவெறி

புவி வெப்பமானதே
அடைமழைக்குக் காரணம்
சொல்கிறது அறிவியல்

புவி வெப்பமுறச்செய்த
நாங்கள்தான் குற்றவாளிகள்
அதற்காக
இப்படி ஓர் தண்டனையா

அண்ணாந்து பார்த்திருந்தோம்
எப்போது நீ வருவாயென

உண்ண உணவின்றி
உறங்க ஒரு இடமின்றி
அண்ணாந்து பார்த்திருக்கிறோம்
எப்போது நீ நிற்பாயென

இயற்கையே
நாம் ஒரு உடன்பாடு செய்துகொள்வோம்
இனி தீங்கேதும் செய்ய மாட்டோம் உனக்கு
தீங்கொன்றும் செய்யாதே எங்களுக்கு

போதும் மழையே
கெஞ்சிக் கேட்கிறோம்
நின்றுவிடு மழையே

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...