Monday 9 October 2017

பள்ளிக்கூடங்கள்

கடந்து போகும் போதெல்லாம்
எப்படியும் திரும்பி பார்க்க வைத்துவிடுகின்றன
நாம் படித்த பள்ளிக்கூடங்கள்.

வெறும் கட்டிடங்களால் ஆனதாக
மட்டுமே இருப்பதில்லை
பள்ளிகூடங்கள்.

சேர்ந்த நாளில்
அழுமூஞ்சிகளாய் வந்தவர்களை
பிரியும் நாட்களிலும்
அழுமூஞ்சிகளாகவே
அனுப்பி வைக்கின்றன
பள்ளிக் கூடங்கள்.

பள்ளி செல்ல
அழுதவர்களையும்
பாடம் சொல்லும் ஆசிரியர்களாக
ஆக்கிவிடுகின்றன
பள்ளிக்கூடங்கள்.

கல்லூரியில் படித்த பாடம்
நினைவில் இல்லை
ஒன்றாம் வகுப்பில் 
படித்த பாடம்
இப்போதும் இருக்கிறது.

அது என்னவோ தெரியவில்லை
எல்லாப் பெண்குழந்தைகளுக்கும்
டீச்சர் விளையாட்டு பிடித்திருக்கிறது.

பள்ளியில் சேர்ந்ததுமே
எல்லாக் குழந்தைகளும்
கையில் குச்சியை வைத்துக்கொண்டு
ஆசிரியர்களாகி விடுகிறார்கள்.

பள்ளி பற்றிய 
நினைவு வரும்போதெல்லாம்
பிடித்த ஒன்றை
இழந்த சோகம் 
நெஞ்சில் ஒட்டிக்கொள்கிறது.

நான் படித்த பள்ளியில்
எனக்கு மிகவும் பிடித்தவர்
வீட்டு பெல் அடிக்கும்
செல்லப்பன் அண்ணன் தான்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...