Saturday 7 October 2017

கவிதைகள்

பேருந்து வரும் வரை
வெட்டிக்கதை பேசுவதும்
வந்தவுடன்
ஆளுக்கொரு வாசல் வழியே
ஏறிக்கொண்டு
பயணச்சீட்டு யாரெடுப்பதென
கத்துவதும்
வழக்கமாகிவிட்டது

பேருந்துக்காக நிற்கும்போது,
நின்று ஏற்றிச்செல்லாத
பேருந்தை
திட்டித்தீர்க்கும் அதே வாய்தான்

பேருந்தினுள் இருக்கும்போது,
எல்லா நிறுத்தத்திலும் நின்று
எல்லோரையும் ஏற்றிச்செல்லும்
பேருந்தையும் திட்டித்தீர்கிறது

விபத்து நடக்கும் 
இடங்களிலிருந்து 
சட்டென்று நகர்ந்து விடுகிறேன்

எல்லோரையும்போல்
நானும்
சுற்றி நின்று
வேடிக்கை பார்த்தேன் என்ற
குற்ற உணர்விலிருந்து
தப்பித்துக் கொள்வதற்காக

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...