Saturday 7 October 2017

உன் புன்னகையைப் பறித்தது யார்-அய்லான்

உன் புன்னகையைப் பறித்தது யார்

மணல்வீடு கட்டி விளையாட வேண்டிய நீ
மரித்துக்கிடக்கிறாய் கடற்கரை மணலில்

தீவிரவாதத்தின் தீராப்பசிக்கு
உணவாகிப் போனாய் நீ

நீ பிறந்த நாட்டின் உள்நாட்டுப்போர் பற்றி
ஏதேனும் தெரியுமா உனக்கு

அகதியென்ற சொல்லை உச்சரிக்க அறியுமா
உன் மழலை நாக்கு

படகினில் ஏறிப் பயணம் போகையில்
சுற்றுலாதான் போகிறோமென நினைத்திருப்பாயோ

அடைக்கலம் நீ வேண்டியபோது அனுமதி மறுத்து
சாவை நோக்கி விரட்டியது கனடா நாடு

ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத் திமிருக்கு
ஐயோ நீ பலியானாய்

இந்தப் பிஞ்சுகளின் உயிர் பருக
எப்படித்தான் மனது வந்ததோ அந்தக் கடலுக்கு
கொடுமை கொடுமை

உயிர் பிரியும் நேரத்தில் எப்படித் துடித்திருப்பாய்
நினைக்கும்போதே கண்ணில் நீர் நிறைகிறது

நீ மரணித்து
எங்களைக் காட்டுமிராண்டிகள் எனச்
சொல்லாமல் சொல்லிவிட்டாய்

மனிதகுலத்தின் மனிதநேயத்தின்மீது
காறி உமிழ்ந்துவிட்டாய்

செருப்பணிந்த உன் கால்களினால்
உலகத்தின் முகத்தின்மீது ஓங்கி உதைத்துவிட்டாய்

உனைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த மனிதசமூகம்
மண்ணோடு மண்ணாகப் போகட்டுமென்று
சாபமிட்டுவிடு

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...